பக்கம்:வேனில் விழா.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

!}' வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இல்லை : நூற்றுக்கணக்கான சிறு கதைகள், ஓரங்க நாடகங்கள், பல நாவல்கள் எழுதி வாசகர்களை மகிழ்வித்து, அவர்களுடைய அன்பை யும் பாராட்டையும் பெற்றவர்; அவருடைய சிறு கதைகளைப் பற்றி என் கருத்து என்ன என்பதைக் கூறுவதுதான் இந்த முன்னுரை.

கதை சொல்லுவதும் கேட்பதும் மனித ஜாதி யின் இயற்கை. உலகத்துக்குப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் போதித்த ஆசாளுக விளங்கும் நம் நாடு ஈடு இணையில்லாத இலக்கியச் செல்வம் படைத்தது என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனல், ‘கதை’ என்பதுடன் சிறு என்கிற அடை மொழியைச் சேர்த்த ஒருவகை இலக்கியத்துறை இருக்கிறேேத, அது அண்மையில்தான் தமிழ் நாட்டில் தோன்றியது ; அதுவும், மேல்நாட்டு உதாரணத்தைப் பின்பற்றித்தான். தோன்றியது என்று ஒப்புக்கொள்வதால் நமக்கு ஒன்றும் அகெளரவம் வந்து விடாது. சிறுகதைத் துறையில், பிரஞ்சு, ருஷ்ய, ஆங்கில, ஜெர்மன் மொழிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இன்று கூட நமக்கு வழி காட்டியாகத்தான் உள்ளது; அந்த உயர்வை நாம் ஒரளவுதான் எட்ட முடிந்துள்ளது.

சென்ற முப்பது ஆண்டுகளாகத் தமிழில் கணக்கு வழக்கு இல்லாமல் பத்திரிகைகள் தோன்றி, தங்கள் இயல்புக்கு ஏற்றபடி தமிழை வளர்த்து வரு கின்றன ; ஒவ்வொரு பத்திரிகையிலும் எண்ணி

{

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/6&oldid=684442" இலிருந்து மீள்விக்கப்பட்டது