பக்கம்:வேனில் விழா.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கை அணைத்தது!

அப்போது கிணற்றிலிருந்து திரும்பி வீட்டினுள் நுழைந்ததும், அவள் கண்ட காட்சி அவள் மனத்தை அப் படியே நிலைதடுமாறச் செய்துவிட்டது. அந்தக் குழந்தை கையில் பிரித்து வைத்திருந்த ஜரிகைக் கவுனே முன்னும் பின்னுமாகத் திருப்பி அழகு பார்த்துக்கொண்டிருந்தது. தான் அணியவேண்டிய சட்டைதானே என்ற எண்ணம் போலும் பச்சைக் குழங்தையின் பால் வழியும் முகத்தில் ஆனந்தம் பொங்கி வழிந்துகொண்டிருந்தது. ஆனல் பூங்கொடியின் உள்ளமோ குமுறிக் கொந்தளிக்க ஆரம்பித் தது.

அந்த ஒருகண கேரத்தில் என்ன கடந்ததென்பது அவளுக்கே தெரியாது. மறுகணம் தரையில் சுருண்டு கிடந்த தன் மகள் வீறிட்டு அலறுவதைக் கண்டதும், முகத் தைப் பார்த்தாள். அவள் உயிரே போய்விடும் போலாகி விட்டது. ஐந்து விரல்களும் அப்படியே அதன் கன்னத்தில் ஆழப் பதிந்திருந்தன. அச்சமயம் அவள் செய்த அடாத செயல் அவளது தளர்ந்திருந்த மனத்தைப் பிளந்துவிடும் போலச் செய்துவிட்டது.

சரோஜாவின் அழுகைச் சத்தம் கேட்ட கந்தன், கை வேலையை அப்படியே போட்டுவிட்டு அலறிப் புடைத்துக் கொண்டு ஓடிவந்தான். குழந்தையின் கண்கள் அழுததன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/61&oldid=684444" இலிருந்து மீள்விக்கப்பட்டது