பக்கம்:வேனில் விழா.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 61

காரணமாக சிவந்திருந்தன, கொவ்வைப்பழம் மாதிரி. கன் னமும் ரத்தச் சிவப்பாய் விட்டது. தன் மனைவியின் பக்கம் பார்வையைத் திருப்பினன். அவள் விழிக்கோடியில் கண்ணிர் மிதந்துகொண்டிருந்தது. தற்செயலாக ஒாத்தில் ஒதுங்கிக் கிடந்த அந்த ஜரிகைக் கவுன் அவன் பார்வை யில் பட்டது. அப்பொழுதுதான் அவனுக்கு சங்கதி புலனு யிற்று. ஒன்றுமே பேசாமல் விசும்பிக்கொண்டிருந்த குழக் தையைத் தூக்கித் தோளில் சாத்தியவண்ணம் தெருப் பக்கம் சென்றுவிட்டான் கங்தன்.

பூங்கொடி மனமொடிந்து இடிவிழுந்தவள் போல உட் கார்ந்து விட்டாள். பன்னெடு நாட்களாக வெகு பத்திரமாக மறைத்துவைக்கப்பட்டிருந்த அந்தக் கவுன் திரும்பவும் தன் குழந்தையின் கையில் காணப்படுவதைக் கண்ணுற்ற தும், அவள் பேதை மனத்திடை அவிந்து கிடந்த எண்ணச் சிதறல்கள் மீண்டும் புத்துயிர் பெற்றன. ஆனல் இந்த கினேவின் நிழல் ஒருபாவமும் அறியாத பச்சைப் பாலகனுக்கு எங்ஙனம் தெரியும்?

மடை திறந்ததுபோல் அவள் நயனச் செம்புகளினின் றும் கண்ணிர் மாலை மாலையாக வழிந்தோடியது. கண் இமைகளுக்கிடையே திரையாக விரிந்த நீர்ப்படலத்தில் புதைந்து கிடந்த நினைவுகள் புனர்ஜென்ம மெடுத்தன.

அன்று மாலைப்பொழுது. அக்திவானத்தில் விந்தைக் கோளங்கள் மலர்ந்திருந்தன. வேடிக்கை செய்து முடித்த பிறகு கையில் தட்டை ஏந்தி, கூட்டத்தை ஒரு தரம் வலம் வந்தான் ஒரு கழைக்கத்தாடி.

காலணு, அரையனக் காசுகள் கவிழ்ந்து முத்தமிட்டன: நெளிந்து காணியிருந்த அவனது தட்டில். உவந்தளித்த அப்புண்ணியவான்களுக்குத் தன் நன்றியைத்தெரிவித்தான் கையிரண்டையும் ஒன்று சேரக் குவித்த வண்ணம். திடுமென அவன் பார்வையில் ஏதோ மின்வெட்டிற்று. தட்டைப் பார்த்தான். இரண்டனப் பணம் ஒன்று வந்து விழுந்தது. அக்காட்சி ஏதோ கனவில் நிகழுவது போன்றிருந்தது. அந்த ஏழிைப் பாட்டாளி கந்தனுக்கு. தலையை உயர்த்தின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/62&oldid=684445" இலிருந்து மீள்விக்கப்பட்டது