பக்கம்:வேனில் விழா.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கை அணைத்தது :

அவனுக்கே ஆச்சரியமாகப் போய்விட்டது அழகு சொட்டும் கட்டழகி ஒருத்தி தன்னை விழுங்கி விடுபவள் போல அவ் விதம் வைத்த கண் வாங்காமல் உற்று நோக்குவதைப் பார்த்தான். கணநேரம் அவன் பார்வை அப்பெண் மீது சுழன்றது. அவளும் தன் ஆனப்போல ஓர் ஏழை என்பதை உணர்ந்தான், அப்போது அவள் தோன்றிய நிலையிலிருந்து. அவன் உடலில் புளகாங்கிதம் போர்த்தியது.

‘இரண்டணு !’ ஆமாம் ; வாழ்வின் விசித்திரப் போக் கிலே ஓர் ஏழையைக்கண்டு மற்றாேர் ஏழையின் உள்ளம் தான் இளகுகின்றது !

கழைக் கூத்தாடி கந்தன் “சலாம் போட்டான் அந்தப் பெண்ணுக்கு. அதுவே அவனது என்றென்றும் மறக்க முடியாத உளமார்ந்த நன்றியின் சின்னம் போலும் !

கூட்டத்தைச் சுற்றி முடிந்து திரும்பவும் அதே இடத் திற்கு வந்ததும், அவன் அவளேக் காணவில்லை. தனக்கு உரித்தான கைப்பொருள் ஒன்றினைக் கைநழுவ விட்டது போன்ற ஓர் ஏக்கம் அவனுள் பொங்கி எழுந்தது

தெளிந்த நீரோடை போன்றிருந்த அவன் உள்ளத் தைத் தொட்டுக் கலக்கிச் சென்றுவிட்டாள் அவ்வனிதை. அத்தி பூத்தது போன்றிருந்தது அவளேக் கண்டதும்.ஆனல் கணப்பொழுதில் கோடைக்கால மின்னல் போல எங்கோ மறைந்து விட்டாளே!

அவன் சித்தம் குழம்பி விட்டது. ஒன்றிலும் அவன் மனம் நாடவில்லை. அன்றைய இரவைப் பகலாக்கிக் கழித் தான். சதா அவள் நினைவுதான். அவளது களைசொட்டும் சிரித்த முகம் அவன் முன் அடிக்கடி தோன்றிய வண்ணம் இருந்தது. முன்பின் தெரிந்திராத அந்தப்பெண் கினைவு அவன் மனத்தில் எழும் சமயமெல்லாம், அவனையும் அறியாத ஓர் இன்பம் இழைபின்னிச் சென்றது.

ஆடுத்த காள் வித்தை செய்வதையும் மறந்து, பைத்தி யம் பிடித்தவன் போல அங்குமிங்கும் அலேந்து கொண்டி ருந்த அவன் காவிரிக் கரைக்குச் சென்றாலாகிலும் மனத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/63&oldid=684446" இலிருந்து மீள்விக்கப்பட்டது