பக்கம்:வேனில் விழா.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கை அணைத்தது !

‘ஏழை அனுதை கான். அப்பனேயும் ஆத்தாளேயும் பறிகொடுத்துப்பிட்டுக் கடைசியா கடவுளே நம்பிக்கிட்டிருக் தேனுங்க. திக்கில்லாதவர்களுக்குத் தெய்வங்தானே தொனே. ஆனல் கடைசியிலே மாரியாத்தாவும் என்ன கைவிட்டுப்பிடுச்சுங்க. அப்புறம் இந்த ஏழைக்கு யாரு கதி? ஏதோ ஒரு ரோசன ஓடுச்சு மன சிலே. ஆத்தா காவேரி கிட்டயாச்சும் அடைக்கலம் புகலாமின்னு கெனச்சேன். அப்பத்தான் நீங்க ஓடியாந்திருக்கீங்க. தெய்வம் போல இருந்திச்சு, ஒங்களைப் பார்த்ததும்.”

அவள் குரலில் சோகம் பின்னணியாய் அமைந்தது. கண்களில் நீர் மல்கிப் பெருகியது.

வாடியிருக்கும் புஷ்பங்கள் பனித்திவலை பட்டமாத்தி ரத்தில் மலர்ந்து சோபிதமடைவதைப் போல, அவளது குவிந்திருந்த முகமண்டலத்தில் மலர்ச்சியின் ரேகைகள் நெளிந்து காணப்பட்டன. அதிர்ந்திருந்த அவள் உள்ளத் திற்கு அபயமளிப்பது போன்றிருந்தது அக்காட்சி.

“இந்தாப்பாரு, அன்னிக்கு ஒன்னைக் கண்டதிலே யிருந்து என் மனசு என்கிட்டே கிக்கலை. சதா ஒன் நினைவு தான். மாரியாத்தா ஒன்னே மறக்கவேயில்லை. இல்லாட்டி, நான் இந்தச் சமயத்துக்கு கணக்காக எப்படி இங்கே வக்தி ருக்கமுடியும். கம்ப ரெண்டு பேரையும் ஜோடி சேர்க்கத் தான் இது கடந்திருக்குது. நீ என்னேடே வந்திடு. ஒன் மனசு கோணும எல்லாம் செய்கிறேன். ரெண்டு பேருமா எங்கிளுச்சும் அக்கரைச் சீமைக்குப் போயி வயிறு கழுவிக் கலாம். வரவர இந்தக் கம்பங் கூத்த டிப் பிழைப்பும் புளிச் சுப் போச்சு. கானு ஒண்டிக்கை மனுசன். என்ன தான் செய்யமுடியும்? யோசிச்சிச் சொல்லு.”

அவன் குரலில் இன்பம் கொஞ்சியது. தாபம் தடம் பதிந்திருந்தது.

தண்ணிர் சொட்டும் சீலயைப் பிழியக்கூட நினைவின்றித் தீவிர யோசனையில் ஈடுபட்டாள் பூங்கொடி. மறுகணம் அவள் தலை கீழே கவிழ்ந்தது. தீர்க்கமான முடிவின் அடை யாளமா, அத்தகைய காணம்? ஆமாம், உயரப்படர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/65&oldid=684448" இலிருந்து மீள்விக்கப்பட்டது