பக்கம்:வேனில் விழா.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 65

செல்லவேண்டிய துவளும் கொடி ஒன்றிற்கு நல்ல கொழு கொம்பு கிடைத்தால் அப்புறம் அதன் வளர்ச்சிக்குக் கேட்க வும் வேண்டுமா?

அவள் பெயர் பூங்கொடி. பூங்கொடி! காசுக்கான பெயர். அழகுக்கேற்ற பெயர்; பெயருக்கேற்ற பொருத் தம்.

கருவேப்பிலக் கொழுந்து போன்ற தன் ஒரே பெண் ணைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பதில் தன் அருமை மனேவி இறந்த ஆருத் துயரத்தையும் மறக்க முயன்றார் கோஞர். கருப்பையாக் கோளுர், பூவத்தக்குடி சுற்று வட்டாரத்தில் ஒரு பெரும் புள்ளி. அவரால் கைதுாக்கி விடப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பங்கள் அனந்தம். இவ் வளவிற்கும் மனுஷன் ரொம்பவும் சுவாகி. கொஞ்சம்கூட கெடுபிடி இல்லாதவர். பதவிசான குணம், ஆல்ை கல்ல மனிதர்களுக்குத்தான் இந்தப் பாழும் உலகில் காலம் இல்லையே!

பூங்கொடி என்றென்றும் செல்லப் பெண்ணுகவே வளரக் கொடுத்து வைக்கவில்லை. கோனுருக்கு இரண்டு நாள் லேசாக ஜ-ரம் கண்டதாம். வரவரக் காய்ச்சல் பல மாய்ப் போய்விட்டது. சாசுவதமாகக் கண்களே மூடிவிட் டார் கோளுர், ஆளுல் அவரது ஆவி ஒடுங்கும்வரை அந்த ஒரே கவலேதானும். தன் செல்லப் பெண்ணின் எதிர்கால வாழ்க்கையை கினைத்து வடித்த கண் ணிரைக் கணக்கிடவே முடியாதாம். பாவம், ஒரே மகள்!

பெண் உள்ளத்தில் பெரியதொரு கொந்தளிப்பு ஏற். பட்டது. தன் தந்தை தன் மீது காட்டிய அன்பைத் திரும் பவும் எண்ணும்போதெல்லாம் அவள் மனம் கருகிச் சாம்ப் லாகி விடுவது போன்ற உணர்வு, எழ ஆரம்பித்தது. இறுதி யில் அவள் தகப்பன் விட்டுச்சென்ற பணத்தையும் பறி கொண்டு விட்டது அக்கும்பல். பாவம் பூங்கொடியின் எதிர்கால வாழ்வு?

தனி மரமானுள் பூங்கொடி. கடவுளின் கருணைக் கண் கள் தன் மீது விழாதா என ஏங்கித் துவண்டாள். அந்தச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/66&oldid=684449" இலிருந்து மீள்விக்கப்பட்டது