பக்கம்:வேனில் விழா.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கை அணைத்தது !

சமயம்தான் அவளுக்குச் சிறிது கிம்மதி ஏற்பட்டது, அந்தச் செய்தியைக் கேட்டதும்.

பக்கத்து ஊர் மாடசாமிக் கோனுர் அவளைத் தன் வீட் டிற்கு அழைத்துக் கொண்டார். அவரது குடும்ப விளக்கு அணேயப் போகும் தருணத்தில், சுடரைத் தூண்டிவிட்டுப் பிரகாசமெய்தச் செய்தவர் பூங்கொடியின் தந்தைதான்.

‘கம் குடும்பத்தைக் கைதுக்கிவிட்டு முன்னுக்குக் கொண்டுவந்த அக்தப் புண்ணியவானுடைய பெண் அணு தரவான கிலேயில் தெருவில் அலைந்து கொண்டிருப்பதைக் கண்டு நாம் கவனியாதிருந்தால் ஊரில் என்ன பேசிக்கொள் வார்கள்?’ என்ற அந்த ஊரின் வசைச் சொல்லிற்காக அவளே அங்கு அழைத்துக்கொண்டார்.

அவருக்கும் ஒரு பெண் இருந்தாள்: பாஞ்சாலி என்று பெயர். இருவருக்கும் கிட்டத்தட்ட சமவயது. ஆல்ை, அழகில் பாஞ்சாலி எவ்விதத்திலும் பூங்கொடிக்கு ஈடா கவே முடியாது. அவ்வளவு அழகி பூங்கொடி. இருந்து என்ன செய்வது? அதுதான் அவளது அழகிற்கு வறுமை திரையிட்டு விட்டதே?

பாஞ்சாலி வீட்டு வேலை ஒன்றும் செய்யமாட்டாள். வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு அசை போடும் மாடுமாதிரி எங்காகிலும் சென்று வம்பளந்து காலத்தைக் கழிப்பதுதான் அவளது அன்றாட வேலை. ஆணுல், காலையில் படுக்கையைவிட்டு எழுந்தது முதல் மீண்டும் படுக்கைக்குப் போகும்வரை உள்ள வேலை அனைத் தையும் உடல் நலியச் செய்யும் பாக்கியம் ஏழைப் பூங் கொடிமீது விழுந்தது. இதற்குத்தான் செஞ்சோற்றுக் கடன்’ என்ற பெயரா? மாடாக உழைத்து ஓடாகி விடும்படி தான் அன்று அவளேப் படைத்த பிரமன் அவள் தலையில் எழுதினுளுகி அழிக்கமுடியாத சிரஞ்சீவித்வம் வாய்ந்ததா அவ்வெழுத்து? ஐயோ! என்ன வஞ்சமோ அந்த ஈசனுக்கு!

அன்று ஒருநாள். அடுத்த ஊரிலிருந்து பாஞ்சாலியின் அத்தான் தங்கவேலு வந்திருந்தான். அவன் கடைக்கண் வீச்சில் பூங்கொடி விழுந்துவிட்டாள். அவளது. வாளிப்பாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/67&oldid=684450" இலிருந்து மீள்விக்கப்பட்டது