பக்கம்:வேனில் விழா.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 67

வளர்ந்திருந்த வனப்பு வாய்ந்த தோற்றப் பொலிவு தங்க வேலின் உள்ளத்தில் த னி பிடம் பெற்றுவிட்டது. எப்படி யாகிலும் பூங்கொடியி. ம் ஒரு வார்த்தையாகிலும் பேசிவிட வேண்டுமென்று துடியாய்த் துடித்தான் அவன்.

வந்தவேலையை முடித்துக்கொண்டு உடனே கிளம்பி விடும் தங்கவேலு, அங்கு இரண்டு நாள் தங்கினன். ஒரே அதிசயமாக இருந்தது பாஞ்சாலிக்கு.

நாட்கள் சென்றன. அவன் அடிக்கடி ஏதாகிலும் வேலையென்று ‘சாக்கு'ச் சொல்லி அங்கு வந்து தங்கிவிடு வான். இவ்வளவிற்கும் தன் மாமன் மகள் பாஞ்சாலியுடன் ஒரு விடிைகட்ட மன அன்புடன் அவன் முகங் கொடுத்துப் பேசினதில்லை.

தன் மீது தங்கவேலு காண்பிக்கும் தனிப்பட்ட சலுகை யில் ஒருவித மனத்திருப்தி எய்தினுள் பூங்கொடி. ஆல்ை, அதே தருணம் அவர் நம்முடன. பேசும சமாச்சாரம் பாஞ் சாலியின் பெற்றாேர்களுக்குத் தெரிந்துபோனுல் என்ன ஆவது கம்கதி? அப்புறம் வயிற்றுச் சோற்றுக்குக் கூடத் திண்டாட்டமாக வல்லவா போய்விடும்” என்ற எண்ணம் தோன்றியதும் மலர்ந்திருந்த அவளது முகம் கூம்பி விட்டது.

இந்த நாடகமெல்லாம் பாஞ்சாலிக்கு எட்டாதிருக்குமா? அவள் உள்ளத்தில் பொருமைத் தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

என் அத்தான்-கான் கண்ணுலம் கட்டிக்கவேண் டிய மொறை அத்தான்-அவரை கேத்திக்கு வந்த அணு தைச் சிறுக்கி மயக்கிப்பிட்டாளே. எங்கண்ணிலேயும் தூவிப்பிடுவாளே.” -

நெய்யுண்ட நெருப்புப் போலானது அவள் நெஞ்சம் அப்போது தெருவைப் பெருக்கிவிட்டு வீட்டிற்குள் நுழைந்த பூங்கொடி திக்பிரமை பிடித்தவள் போல அப்ப டியே கின்றுவிட்டாள் கற்சிலையாக, அந்த வார்த்தைகள் அவளது காதுகளில் கார சமென விழுந்தன. ‘'நர்ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/68&oldid=684451" இலிருந்து மீள்விக்கப்பட்டது