பக்கம்:வேனில் விழா.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கை அணைத்தது !

அப்பவே சொன்னேனே கேட்டிங்களா? பலே கைகாரியாக இருப்பாண்ணு எனக்கு முன்னமே தெரிஞ்சுதே, அவ ஆடிக் குலுங்கி சினிமாக்காரிபோல நடந்து வரதிலேருந்து பாஞ்சா லிக்குச் சொந்த அத்தான். எனக்குத் தம்பி. அதுக்கும் கேத்திக்கு வந்த அனுதைக் கழுதைக்கும் என்ன சம்பந்தம். வரட்டும் அவள்? உண்ட வீட்டுக்கே ஒலே வச்சுப்புட்டாளே. அது கண்ணிலே மையைப் போட்டில்ல மயக்கிப்பிட்டா பாவி.’’

பூங்கொடி தளும்பி கின்ற கண்ணிரைத் துடைக்கக் கூட கினேவின்றிப் புறப்பட்டுவிட்டாள் கால் சென்ற வழியே. காவேரி ஆக்த எண்ணம் மின்வெட்டியது பேதையுள்ளத் தில். அன்னே காவேரியிடம் அடைக்கலம்பெற விரைக் தோடிச் சென்ற சமயம்தான். கந்தன் அங்கு தோன்றிய காட்சி அவளுக்கு வாழ்வின் புதுமலர்ச்சியென இருக்தது.

பூங்கொடி!’

புதுவெள்ளத்தின் உற்சாகம் தொனிக்க அன்பு கொஞ் சும் குரலில் தன் மனைவியை அழைப்பான் கந்தன்.

அவளும் ஓடோடிவந்து துறுதுறுவென்று எழில் செய் யும் அவளது குறும்புப் பார்வையைத் தன் கண்வன் மீது சுழல விட்டபடி அவனே வரவேற்பாள்.

‘கண்டிச் சீமையில் தேயிலைத் தோட்டமொன்றில் அவனுக்கு வேலை. காலையில் செல்லும் அவன் மறுபடியும் திரும்பும் சமயம் இருட்டிவிடும். அவன் வீட்டிற்குள் நுழ்ை வதற்கும் பூங்கொடி சாதத்தைப் பரிமாறித் தயாராக வைத் திருப்பதற்கும் கணக்காக இருக்கும். பசிக்களேப்பில் அடைத்தவாய் திறக்காமல் கட்டைக் காலி செய்துவிடு வான். கந்தன். ஆமாம், கன் வாவிற்காக கெடுநேரம் வரும் வழியின் மீது விழி தாழ்த்திய வண்ணம் காத்துக் கிடக்கும் தன் அருமை மனைவி கொஞ்சும் கிள்ளைமொழிகள் உதிர்ந்த வண்ணம் உணவு பரிமாறும் சமயம் கூழானுலும் அவனுக் குத் தேவாமிர்தம் போன்று சுவைமிகுந்துதானே காணப் படும்? சாப்பிட்டுக் கை அலும்பியவுடன் கையில் மடித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/69&oldid=684452" இலிருந்து மீள்விக்கப்பட்டது