பக்கம்:வேனில் விழா.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

லடங்காத கதைகள் வெளிவருகின்றன. அது மட்டும் அல்ல, வீட்டுக்கு ஒர் எழுத்தாளர் பிறந்து கொண்டி ருக்கிறார். ஆல்ை, பே ைபிடித்தவர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள் ஆகிவிடவில்லை ; அச்சில் வந்த கதைகள் அனைத்தும் சிறுகதைகள் ஆகிவிடவில்லை : “நான் வகுத்துச் செல்லும் பாதை புதிது : என் எழுத்துக்கள் தனிரகம்’ என்ற முத்திரையுடன் எழுதும் ஆசிரியர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். இந்தக் கோஷ்டியில் பூவை. ஆறுமுகம் அவர்களுக்கு நிச்சயமாக ஓர் இடம் உண்டு.

பூவையின் எழுத்துக்களில் என்னைக் கவர்ந்த சிவ அம்சங்களைக் கூறுகிறேன். -

அறுநூறுக்கும் அதிகமாய்க் கதைகள் எழுதி யிருப்பதாக அவர் கூறுகிரு.ர். இவ்வளவு அடர்த்தி யாக எழுதிய ஆசிரியர்கள் உலகத்திலேயே மிகச் சிலர்தான் இருக்க முடியும் , அந்த அளவுக்கு அது ஒரு சாதனை ! ஆனால் அதை இலக்கியத்தரத்துக்கு அடையாளமாக ஏற்க முடியாது அல்லவா ? -

கதை கட்டும் திறமைதான் கதாசிரியனை உரு வாக்குகிறது. இந்தப் பழைய செல்லரித்துப்போன’ உலகத்தில் புதிதாக, யாருக்கும் தெரியாததாக எதையும் எந்த ஆசிரியனும் கூறிவிடப்போவதில்லை. ஆளுல் அவன் அதை எப்படிச் சொன்னன்? என்பதைக் கொண்டுதான் அவன் கலைஞன, இல்லையா என்பதை நாம் முடிவு கட்டுகிருேம். பூவை சொல்லவந்ததை நயமாகச் சொல்கிறார்: நேராகச் சொல்லுகிறார்; படிப்பவர்களின் மனத் தில் பதியும் வண்ண்ம் சொல்கிறார் ; போதாதா? அவர் சொல்லுக்காகவோ, சொல்வதற்காகவோ தவிப்பதை அவருடைய எந்தக் கதையிலும் காண முடியவில்லை. அவருடைய எழுத்தாண்மைக்கு இது

போன சான்று தானே ? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/7&oldid=684453" இலிருந்து மீள்விக்கப்பட்டது