பக்கம்:வேனில் விழா.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 69

வைத்திருக்கும் வெற்றிலேயை அவனிடம் நீட்டுவாள். வெற்றிலையை வாயிலிட்டு மென்றவண்ணம் வாசலில் துண்டை விரித்துப் பேச உட்கார்ந்துவிடுவார்கள் அந்த ஏழைத் தம்பதிகள் இரண்டுபேரும். அப்போது காலம் போவதே தெரியாது.

அவர்கள் இருவரும் ஏழைத் தம்பதிகள். ஆமாம்; அது அவர்களது குற்றமல்லவே. அந்த ஏழைபங்காளன் என்றாே அவர்களே அங்ஙனம் சதிசெய்துவிட்டான். ஆனல் அவர்கள் தங்களது ஏழ்மை கிறைந்த வாழ்விலே கானும் இன்பத்திற்கு ஈடே இருக்க முடியாதல்லவா?

காலச்சக்கரம் கனவேகத்தில் சுழன்று வருஷம் ஒன்று அதற்கப்புறம் ஓடிவிட்டதை அறிவித்தது. அப்பொழுது பூங்கொடி சாதாரணப் பூங்கொடியா யிருந்தாள். ஆனல், இன்று அவள் ஒரு தாய்!

lட்கள் க! - வின. {{}

அன்று ஒருநாள் பூங்கொடி’ என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்தான் கந்தன். சரோஜாவைத் தோளில் சாத்தி வைத்திருந்தான். பொக்கை வாயைத் திறந்தவண்ணம் தன்னையும் மறந்துவிட்டுச் சிரித்துக் கொண்டிருந்த தன் மகளைக் கவனித்தாள் பூங்கொடி. அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. குழந்தைக்குப் புதி தாக அழகாக மின்னும் “ஜரிகைக் கவுன் ஒன்று போட்டி ருந்தது.

“ஆமா சட்டை புதுசா இருக்கே இன்னிக்கு வாங்கி ரீைர்களா. விலை ரொம்ப அதிகமாயிருககுமே.”

‘பூங்கொடி, கேத்திக்கு நம்ப தமிழ் நாட்டிலேயிருந்து புதுசா ஒருத்தர் இந்தக் கப்பலிலே வந்திருக்காரு. ரொம்பத் தங்கமான குணம். அந்த ஆண்ணன் வாங்கித் தந்தது தான் இந்தப் பட்டுச் சரிகை போட்ட சட்டை, பழகினது ரேண்டு நாழிகையாச்சும் இருக்குமோ என்னவோ; அதுக் குள்ளே ரெண்டு வருசம் தோளுக்குத் தோளாகப் பழகி விட்டது மாதிரி அவ்வளவு சிநேகிதமாகி விட்டோம் காங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/70&oldid=684454" இலிருந்து மீள்விக்கப்பட்டது