பக்கம்:வேனில் விழா.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 71

ஆளுல் நடந்தது!-குமுறும் கடலேக் கடர்ந்து பார்த் தாள். அப்போதுதான் கப்பல் புறப்பட்டுக் கொஞ்ச தூரம் ககர்ந்து சென்றது. அல்லலுற்ற மனம் ஆறுதல் எய்த மார்க்கம்......?

கலங்கிய கண்களுடன் ஏறிட்டு விழித்தாள். தன் கணவனுடன் வந்தகொண்டிருந்த அவள். சிறு குழந்தை போல தேம்பி அழுதவண்ணம் அன்றுவரை மனத்தை அழுத்திக்கொண்டிருந்த சங்கதி பூராவையும் ஒன்று விடாமல் சொன்னுள்.

திரும்பவும் நீர்நிரம்பிய கண்களுடன் நீலத் திரைக் கடலேப் பார்த்தாள். கப்பல் மறைந்துவிட்டது. ஆனல், குமுறிப் புரளும் அலைகளின் பேரிரைச்சல்தான் அவள் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது!

‘அம்மா-அம்மா!’

குழந்தை தன் மழலை மொழியில் கொஞ்சும் குரலில் அழைப்பதைக் கேட்டதும்தான் அவளுக்குச் சுயநினைவு வந்தது. அவள் உள்ளக்கடலில் அதுவரை ஆர்ப்பரித்த வண்ணமிருந்த எண்ண அலைகள் ஓய்ந்தன. திடுக்கிட்டெ ழுந்தாள், முகத்தில் தோய்ந்திருந்த நீர்த்திவலைகளைத் தன் சேலத் தலைப்பால் துடைத்துக்கொண்டு.

சரோஜாவைப் பார்த்தாள். தந்தையின் தோளில் ஒய்யாரமாகச் சாய்ந்திருந்த அக்குழங்தை ரொட்டித் துண்டைச் சுவைத்துக்கொண்டிருந்தது. அதற்கும் சங் தோஷம் தாங்கமுடியவில்லை.

பூங்கொடி தன் கணவனிடமிருந்து குழந்தையை வாங்கி, கீழே கிடந்த அந்த ஜரிகைக் கவுனை எடுத்துப் போட்டாள் சரோஜாவிற்கு. அச்சமயம் அதன் ஆனந்தம் பன்மடங்காகி சிவப்புக் கன்னங்களில் குழி விழுந்தன. அதன் எழிலில் மனம் பூரித்து அப்படியே வாரியணத்த வண்ணம் உச்சி மோந்தாள் பூங்கொடி. அப்பொழுது அத்தாயுள்ளம் அடைந்த ஆனந்தத்தை அளவிடல் சாத் தியமாகுமா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/72&oldid=684456" இலிருந்து மீள்விக்கப்பட்டது