பக்கம்:வேனில் விழா.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் எனும் வேள்வியில்...!

டாக்டர் நாகசுந்தரம் இருமத் தொடங்கினர்; புறப்பட்ட ஓர் இருமல் ஒன்பது இருமல்களைத் துணைகொண்டது. வழி கடையைத் தொடர முடியாமல் கனைத்துச் சளைத்துப் போனவர் போன்று அவர் நெடுமூச்சை வெளிக்காட்டினர். வெளிக்கொட்டப்பெற்ற வேதனையின் துகள்கள் டாக்டரின் சோர்ந்த முகத்திலே வேர்வை முத்துக்களாக உருமாறின. உருமாறிப்போன அவரது வதனத்தில் சுடுநீர் பாத்திகட்டத் தொடங்கியது. அவர் முணமுணத்தார். ஈசுவரா!’

கிலாக் கொழுந்தின் பால் வண்ணச் சீதளக் கதிர்கள் அந்தப் பெரிய வீட்டில் மணல் வீடு கட்டி விளையாடிக்கொண் டிருந்த வேளை அல்லவா அது?

டாக்டர் நாகசுந்தரம் உயிர்ச்சத்தை உள்ளத்துக்குப் பக்கபலமாக்கிக் கொண்டு, அதன் விளபலனுகக் கிடைத்த வலுவை உடலில் ஒட்ட வைத்தவாறு எழுந்து அமர்ந்தார். அணுகிக்கிடந்த செய்தித்தாள் அவரை வருந்தி அழைத் தது; விழிக்கண்ணுடி மூக்கில் அணைந்தது; பார்வை திசை மயக்கம் கண்ட பாங்கில் அல்லாடிற்று. சில கணப்பொழுது கடுகிக் கழிந்தது. செய்தித்தாளின் கடைசிப் பக்கம் புரண்டது; டாக்டர் படித்தார்; மீண்டும் வரிகளே வரிசைப் படுத்திப் படித்தார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/74&oldid=684458" இலிருந்து மீள்விக்கப்பட்டது