பக்கம்:வேனில் விழா.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 மனம் எனும் வேள்வியில்...!

“நான் தற்சமயம் அறங்தாங்கியில் கீழ்க்கானப்படும் விலாசத்தில் வாசம் செய்துவருகிறேன். நான் சாவுடன் மன் ருடிக் கொண்டிருக்கிறேன். விதி என்னுடைய ஜீவனுடன் விளையாடிக் கெலிப்புக் கொள்ள வேளை பார்த்துக் கொண் டிருக்கிறது.

இப்படிக்கு, டாக்டர் நாகசுந்தரம் எம்.பி.பி.எஸ். 9, வீரமாகாளியம்மன் தெரு, அறந்தாங்கி.”

தலையை உயர்த்தினர் காகசுந்தரம். சென்னைப் படிப்பு தந்த பட்டங்களேச் சுமந்து, இளமை பொலிவு காட்ட, அந்தப் பொலிவு வருங்காலத்தின் பசுமையை முன் கூட்டியே எடுத்துச் சொல்ல, நிழற்படத்தில் காட்சி தந்து கொண்டிருந்த தம்முடைய அங்காளைய உருவத்தை ஆழப் பதிய விழித்து விழித்து நோக்கினர். மீண்ட சுய கினைவு அவரது கோக்கிற்குத் துாண்டுதல் அளித்தது. அந்த உருவத்தினயே அவர் ஏன் அப்படித் திரும்பத் திரும்ப கோக்க வேண்டும் ? உருவத்தின் உள்ளத்தை உய்த்துணரவா?...'ஊம்’

“வீரம் விளைத்த குமரன்’ சுவரின் கீழ்க்கோடியில் அருட் கருணை மழை பொழிந்துகொண்டிருந்தான்.

அண்டியிருந்த தியேட்டரில் முதல் ஆட்டம் முடிந்தது; மண்டிப் புறப்பட்டது கும்பல்; பேச்சரவம் அவரின் கெஞ் சத்தை அரமெனத் தீண்டியது, செவிகளைப் பொத்திக் கொண்டார் அவர். அழைக்கும் மணி'யை அழுத்தி விட்டார். மும்முனைப் போட்டி ஒன்று உருவானது. வந்து நின்ற மூவரையும் உறுத்துப்பார்த்த நாகசுந்தரம் வலக்கை யின் சுட்டுவிரலே அசைத்துச் சைகை செய்யலானர். மறு கணம் ஒருவன் மட்டுமே எஞ்சினன். எஞ்சிய அமைதி யுடன், சடையப்பா, விருந்தாளிங்க எல்லோரும் இன்ன முமா துரங்கவில்லே?...அவங்களிலே யாரும் இங்கே வரப் உடாது; நீ சொல்லிப்பிடு!’ என்று எச்சரித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/75&oldid=684459" இலிருந்து மீள்விக்கப்பட்டது