பக்கம்:வேனில் விழா.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மனம் எனும் வேள்வியில்...!

போ. உங்க அம்மா உளவு அறிஞ்சுக்கிட்டு வரச் சொன்னங் களாக்கும்!...ஆபத்துக்கு உதவி ஒத்தாசை பண்ணவா இத்தனை படைங்களும் வந்து குமிஞ்சிருக்குதுங்க, எல்லாம் ஐயாவோட பணம் பண்ணுற வேலை கிடைக்கிற பணத்தைக் கையிலே மடியிலே கொண்டுபோன மட்டும் ஆதாயங் தானே!” என்று தன் போக்கில் பேசிக்கொண்டேயிருந் தான். நீ போ!’ என்றவுடன் கல்லபிள்ளையாகப் போய் விட்டான் அச்சிறுவன்,

வேலைக்காரன் சடையப்பனின் காதில் ஏதோ ஓதினன் சமையலாள்.

“அட, நீ ஒண்னு கேக்கிரதைச் சத்தமாத்தான் கேட்டுத் தொலையேன் !”

‘நீ என்ன ஐயா, என்னைப் போய்த்தொலையச் சொல்றே ?...என்ன கம்பி என் சம்சாரம், பிள்ளைகுட்டி எல்லாரும் இருக்காங்க ஐயா !”

சி , சரி. உனக்கு என்ன சந்தேகம் திடீர்னு முளைச்

து :

‘வந்து...கம்ம முதலாளிக்குக் கல்யாணம் காட்சி... ஒண்ணும்...! என்று கேட்கும்போதே, சமையற்காரனின் வார்த்தைகளே இடைவெட்டினுன் சடையப்பன்.

“ஊஸ், சத்தம் காட்டாதே. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும், எசமானுக்குக் கல்யாணம் அது இது எல்லாம் எப்பவோ கடந்திடுச்சாம். அவுங்க காலமாயிட்டாங்கண்ணு காதிலே சேதி விழுந்திச்சுது. இப்ப ஐயா ஒண்டிக் கட்டை யாத்தான் இருக்காங்க. இந்த வீட்டுக்கு நான் வேலைக்கு வந்தும் ஒரு ‘மகாமகம் ஆயிடுச்சு. முந்தியெல்லாம் தொழில் முடிஞ்ச நேரங்களிலெல்லாம் ஐயா தனியே உட்கார்க்துகிட்டு எதைப்பத்தியோ தீவிரமா யோசனை செஞ்சிக்கிட்டே இருப்பாங்க. இப்ப ஒரு வருசம்ாத்தான் ஆளைக் கீழே தள்ளிப்பிடுச்சிதே !.. எப்பிடிப்பட்ட கடல் கொள்ளாக் கவலையோ, என்ன காரணமோ ?...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/77&oldid=684461" இலிருந்து மீள்விக்கப்பட்டது