பக்கம்:வேனில் விழா.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 77

செஞ்சோற்றுப்பணி இயற்றுபவனைப் போன்று அவனது கண்ணிர் மடைகட்டி, மடைமீட்டு வெடித்து வடியத் தொடங்கிற்று.

“ஆமா, ஐயா பேப்பரிலே விளம்பரம் குடுத்திருக்காங் களாமே அது என்ன கதை?” என்று மற்றுமொரு புதிய ஐயப்பாட்டை உணர்த்தலானுன் உணவுத் தயாரிப் t_ft sor 6 or ,

“அதுதான் எனக்கும் மூடுமந்திரமா இருக்குது. இம்பிட்டுப் பெரிய வீட்டிலே வந்து கூடியிருக்கிறவங்களே முதலாளி எதிர்பார்க்கலன்னு புரியுது. ம், வேறே யாரை ஆவலாப் பார்க்கிறத்துக்குக் காத்துக்கிட்டிருக்கிருரோ?-”

அந்தித் தென்றல் இதயத்தளத்திலே இதம் அளிததது; அழிபட்ட வேதனைக் குமைச்சலே மறுமுறையும் கிண்டிக் கிளற எத்தனித்தது அழைப்பிதழ். தோட்டமும் தோட்டத்து நிழலில் மனிதனின் ஆயுளும் குறைபடுகிறது என்பது மெய் தானே ? அப்படியென்றால், அந்த கிழலிலே தான் விதியின் கையெழுத்தும் அடங்கிக் கொள்கின்றதா ?

‘விதியாவது மண்ணுங்கட்டியாவது ‘-ட க் ட ர் பற்களைக் கடித்துக் கொண்டார். விதியை மென்று துப்ப முனைந்திருக்க மாட்டார் அவர் காரணம் அவருக்கு அக் நிலையில் அத்துணைச் சக்தி ஊறிக்கிடக்கவில்லை என்பது தான் !

‘மணமகன் : சிரஞ்சீவி டாக்டர் நாகசுந்தரம்-செள பாக்கியவதி டாக்டர் ஊர்மிளா என்ற பெயர்கள் பளிச் சிட்டன : அப்பெயர்களுக்குத் தொடர்பாக எம். பி. பி. எஸ்: என்னும் பட்டங்களும் ஒட்டி உறவு கொண்டிருந்தன.

முறுக்குக் கயிறு பிரி தளரும்போது, கயிறு மதிப்பை இழந்து விடுவது இயற்கை ; அதுபோலவேதான், டாக்டர் நாகசுந்தரத்தின் கிலேயும் கினேவும் அப்பொழுது இயங்கின : இருந்தன. ஒருவேளை, அதுவே தான் காலமெனும் புதிர்க் கயிருே ? - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/78&oldid=684462" இலிருந்து மீள்விக்கப்பட்டது