பக்கம்:வேனில் விழா.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மனம் எனும் வேள்வியில்...!

காரைக்குடி பஸ் ஒன்று தோட்டத்துச் சுற்றுச் சுவரை உரசியவாறு சென்றது. புழுதிப்படலம் விரிந்தது. டாக்டர் இருமத் தொடங்கினர். அடிவயிறு எம்பியது; இறங்கியது. கண்ணிர் வந்துவிட்டது; கைத்தடியை மண்ணில் பதித்தவ ராக, எழுந்தார். புதுமணத் தம்பதிகள் போய்க்கொண்டிருந்த னர். இதழ் நெளிவில் சிரிப்பு கரைகட்டியது. சென்னைமா நகரத்தின் நினைவு வந்தது; அங்கே ஓரிடத்தில் கட்டுக் கட்டாகக் கட்டிப் போடப்பட்டிருந்த திருமண அழைப்புக் களின் நினைவு அவருக்கு இனிக்கச் செய்ய முடியுமா, என்ன ?

  • டாக்டர் ஸார் !’

நாகசுந்தரம் மெள்ள மெள்ள அடியெடுத்து வைக்கத் தொடங்கினர். ஓ ! நீங்களா ? வாங்க டாக்டர் லார் !” என்று கைகுவித்தார். -

இரண்ட ங்கட்டில் போடப்பட்டிருந்த மெத்தையிட்ட நாற்காலிகளிலே இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்தனர். இன்னொருவர் அரசாங்க மருத்துவமனையில் வேலை பார்த் தார் ; உற்ற நண்பர்.

‘மிக்சர், டாப்லட், இஞ்செக்ஷன் இப்படி எல்லாவற்றை யும் நீங்க உதறித் தள்ளில்ை, என்ன ஆகிறது டாக்டர் ευτή 2"”

“இவை யெல்லாம் என் உள்ளத்துக்கு ஒருபோதும் மருந்தாகாது ங்க, டாக்டர் பிராணதார்த்தி.”

“நீங்க வயசிலே பெரியவங்க. வேறே இதைக்காட்டி லும் நான்...’

‘ உங்க அன்புக்கு மெத்தவும் வந்தனம். ஆமாம் ; இதைப் பார்த்திருப்பீங்களே, பிரானதார்த்தி ?”

“s 1”

இந்த விளம்பரம் கொடுக்கப்பட்டதன் நோக்கம் இன்னமும் நிறைவேறவில்லை. கான் எதிர்பார்க்கும் ஓர் உருவததை கான் கண்டுவிட்டால், அப்புறம் என் ஆவி கிம்மதியோடு அடங்கிவிடும் !’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/79&oldid=684463" இலிருந்து மீள்விக்கப்பட்டது