பக்கம்:வேனில் விழா.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

எந்தக் கதையையும் (சிறு கதை, நாவல், நாடகம் எதுவானுலும் சரி) அழகாய்ச் சொல் வதற்கு அழகான நடை அவசியம். உயர்ந்த கருத்து செம்மையான நடையில்தான் வெளி யாகும். எண்ணத்திலும் கற்பனையிலும் கம்பீரம் தோன்றும்போது, நடை தானகப் பண்படுகிறது. நடையழகை ரசிக்கத் தெரியாதவன் கலைஞளுகவோ விமரிசகளுகவோ இருக்க முடியாது. பண்பட்டபண்பாடு கொண்ட கலைத்தன்மை மிகுந்த நடை முறை வாழ்வியல் கதைகளைத் தாம் எழுதுவதாகப் பூவை கூறுகிறார் ; அதற்கு அவருடைய ‘பண்பட்ட’ நடை வலிய கருவியாக உதவுகிறது. ஆற்றாெழுக்குப் போல் பெருக்கெடுக்கும் அவருடைய நடையழகிற் காக-மற்றும் ஒருமுறை அவருடைய கதைகளைப் படிக்கவேண்டும் என்னும் ஆவல் தோன்றுகிறது. பூவையின் வெற்றிக்கு அவருடைய நடை மூலபலம்.

இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. பூவையின் கதைகளைப் படிக்கும்போது தமிழ் மண்ணின் மணத்தை நுகருகிருேம் ; பட்டினக்கரை முதல் பட்டிக்காடுவரை, மாளிகையிலிருந்து சேரி வரை தமிழகத்தின் உயர்வு தாழ்வுகளை எல்லாம் காண்கிருேம்; இந்த உயர்வுக்காக மகிழ்வதா, அந்தத் தாழ்வுக்காக அழுவதா என்று தடுமாறு கிருேம் ; ; மனித இயற்கை இதுதான்’ என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ளுகிருேம். பூவையின் கதைகளைப் படிக்கும்போது இத்தகைய உணர்ச்சி கள் எழுகின்றனவா இல்லையா என்பதை, நீங்களே அக் கதைகளைப் படித்து முடிவு செய்யுங்கள்.

கும்பகோணம், ... ... 10—11—64. } எம். வி. வெங்கட்ராம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/8&oldid=684464" இலிருந்து மீள்விக்கப்பட்டது