பக்கம்:வேனில் விழா.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 79

  • அந்த நபர் இருக்கும் இடம் ?” * ஊஹ-ம், எதுவும் தெரியாதுங்க ...” “ அந்த நபர்...யார்...?...’

நாகசுந்தரத்தின் விழிநீர் பாய்ந்தது ; ஓடோடிப் பெருகியது.

  • மன்னித்து விடுங்கள், டாக்டர் ஸார் !”

‘ மிஸ்டர் பிரானதார்த்தி, நீங்களும் என்னே மன்னித்து விடுங்கள் !”

விடை பெற்றுப் பிரிந்தபோது, வழக்கம் போல டாக்டர்

பிரானதார்த்தியின் இதழ்க் கரையில் காப்பியின் சுவை தங்கியது.

முதல் தேதி.

பூர்த்தி செய்யப்பெற்ற பணம் அனுப்பும் தாள்கள் சிலவற்றை நீட்டினர் ஓர் இளைஞர்.

எல்லாவற்றையும் சரியாகப் போட்டுவிட்டிர்களா, பால்ராஜ் ??

  • ஆமங்க, சார் !”

எல்லாவற்றிலும் தம்முடைய கையொப்பத்தை இட்டார் டாக்டர் நாகசுந்தரம். பள்ளம் கண்ட இடத்தில் தண்ணிர் தேங்கும். அதுபோல, தம்முடைய அன்பில் ஏழை எளிய வர்களின் வறுமை தேங்கியதை எண்னமிட்டார் ; தேங்கிய வறுமைக்கு விடிவு காட்டின அவரது தயாள மனமும் அறப் பண்பும். ஊர்பேர் தெரியாதவர்களின் உடல், உள்ளம் ஆகியவற்றைச் செம்மைப்படுத்திய நிகழ்ச்சிகள் கொத்துக் கொத்தாக முகிழ்த்தன.

“ இருப்புப் பெட்டியைத் திறந்து, உங்களுக்கு இன்று அனுப்புவதற்குத் தேவைப்படக்கsடிய பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள், பால்ராஜ். அத்துடன், இருப்புப் பணம், பாங்க் பாலன்ஸ் ஆகியவைகளின் புள்ளிவிவரத்தையும் இன்றைக்கு இரவிலே எனக்குச் சொல்லவேனும்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/80&oldid=684465" இலிருந்து மீள்விக்கப்பட்டது