பக்கம்:வேனில் விழா.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மனம் எனும் வேள்வியில்...!

  • நல்லதுங்க !’ அப்பொழுத, வான் கண்ணில் சூடு பறந்தது.

புதிய காரொன்று வந்து கின்றது. சடையப்பன் வந்து தகவலேத் தெரிவித்தான். டாக்டர் நாகசுந்தரம் சாய்மானத் தில் சாய்ந்தவாறு தம்மைச் சரி செய்து கொண்டார். கரை கண்ட இழைகளைக் கோதிவிட்டார் , அலமாரியில் பதிந்த கண்ணுடியில் அவரது உருவம் தெரிந்தது. அவர் வேறு புறம் திரும்பினுர். பட்டம் ஏந்திய தருணம் எடுக்கப்பட்ட படம் இருந்தது. பட்டத்து இளவரசர் போலல்லவா இருக் கிறது படம் ?

ஐம்பது வயதை எட்டிக் கொண்டிருந்த தம்பதியாக அவரும் அவளும் இணைந்துவந்து கின்றகோலம் நாகசுந்தரத் தின் விழி விரிப்பில் தெரிந்தது. அம்மணி முதலில் கரங் குவித்தாள்.; அப்பால், அந்த மனிதர் வணக்கம் தெரிவித் தார். -

  • உட்காருங்க !’ என்றார் நாகசுங்தரம்,

“ நான்தான்...” என்றவாறே அவள் ஆசனத்தை ஆட்கொண்டாள் ; ஒட்டினுற்போல அவர் அமர்ந்திருந்தார்.

  • தெரியுமே!......பத்மாவதி ! உங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கும் கோயமுத்துாருக்கு வந்திருந்தேனே !” என்று சிரித்தார் அவர்.

ஒரு காட்சி மாற்றம் :

இதே பத்மாவதியிடம் இருபத்திரண்டு வருஷங் களுக்கு முக்தி போய், டாக்டர் நாகசுந்தரம் பேசலுற்றார் : ‘பத்மாவதி, நீ என்னை மன்னித்துவிடு. உனக்கும் எனக்கும் ஏற்பாடாகியிருக்கும் திருமணம் நடக்காது; என் இதயத்தில் ஒரே ஒருத்திக்குத்தான் இடம் உண்டு. அந்த இடம் யாருக்காக உரிமைப்பதிவு செய்யப்பட்டிருந்ததோ அந்தப் பெண்ணே என்னிடமிருந்து விதி பிரித்துவிட்டது. மனம் ஒன்றுபட்ட எங்களின் ஜாதகங்கள் பொருந்தவில்லை யென பெண்ணின் தந்தைக்கு வேண்டிய சோதிடர் ஒருவர் பயங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/81&oldid=684466" இலிருந்து மீள்விக்கப்பட்டது