பக்கம்:வேனில் விழா.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 8 H

காட்டிவிட்டார். அச்சடிக்கப்பட்ட கல்யாணப் பத்திரிகைள் மூட்டையாகக் கட்டப்பட்டு மூலையில் வீசப்பட்டன. என் உள்ளக் கோயிலில் உருப்பெற்று வீற்றிருக்கும் அந்தச் சுவர்ண விக்கிரகத்தின் நினைவு ஒன்றே என்னே வாழ வைத்துவிடும். ஆகவே, நீ என்னை மறந்துவிடு. உன் தந்தையிடம் கானே வந்து சொல்லி உன்னை வேறிடத்தில் கட்டிக் கொடுக்க ஆவன செய்வேன். என்னத் தயவு பண்ணி மன்னித்துவிடு, பத்மாவதி!’

பத்மாவதியும் நாகசுந்தரமும் ஓடிக்கொண்டிருந்த மனத்திரைப் படக் காட்சிகளில் லயித்திருந்தனர் போலும் !

‘பத்திரிகையிலே பார்த்தேன். மனசு கஷ்டப்பட்டுப் போச்சு. இவுங்களையும் அழைச்சுக்கிட்டு அதுதான் ஒடியாங்தேன்’ என்றாள் பத்மாவதி. வைரங்களுக்குக் கண் ஒளி மிகுதி ஆயிற்றே!

டாக்டருக்குக் கண் கச்சம் உண்டாயிற்று: ‘ம்’

‘அடுத்த வாரந்தான் நீங்க ஊருக்குப் போகணும். இது உங்க வீடு மாதிரி!”

உம்மை வினைப் பயனை ஆய்ந்துணர எத்தனிப்பவர் போன்று, டாக்டர் தம் மார்பில் அந்த நாடிக்குழலைப் பொருத்திப் பார்க்கத் தலைப்பட்டார். அவர் தலே கனத்தது; அது உள்ளத்தின் சுமையோ, என்னவோ? ம்; என் கணு இனி எங்கே பலிக்கப் போகுது?... அவர் பச்சைக் குழந்தை யென விம்மலானர்.

வெறும் உயிலும் கையுமாக வீற்றிருந்தார் வக்கீல். பால்ராஜ் கின்று கொண்டிருந்தான். அவன் கையில் கனக்குகள் தாங்கிய தாள் இருந்தது.

‘பால்ராஜ், கூட்டுப் புள்ளி மொத்தத் தொகை என்ன சொன்னிங்க?’ என்று கேட்டார் டாகடர் நாகசுந்தரம்.

‘எல்லாம் சேர்ந்து எண்பதாயிரத்து அறுபது ரூபாய்க்கு நெருங்குதுங்க!”

‘பால்ராஜ் இந்த லிஸ்ட்படி அவரவர்களுக்குப் பணத்தை இப்போதே பட்டு வாடா செய்து விடுங்க, பாங்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/82&oldid=684467" இலிருந்து மீள்விக்கப்பட்டது