பக்கம்:வேனில் விழா.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 83

கண்ணிர் மணிகளை ஒதுக்கிக்கொண்டிருந்தாள் அவள். ‘யாத்திரை போகாமல் இருந்திருந் ஆால் அந்த விளம்பரத்தை கல்ல சமயத்திலே பார்த்திருப்பேனே!...பாவம்!”

  • உட்கார், ஊர்மிளா!”

ஊர்மிளா உட்கார்ந்தாள். அவளையே இமைமூடிய வண்ணம் பார்வையிட்டார் நாகசுந்தரம். வைத்தியக் கல்லூரி வாழ்வில் கனிந்த ஊர்மிளாவின் அறிமுகத்தையும் அவளது பண்பும் எழிலும் கைமயக்காகி-வசிய மருந்தாகி தம்மை ஆட்கொண்டதையும் எண்ணமிட்டாரா அவர்?

இல்லை; யுவதியின் சதியை மீனத்தாரா?

பிறிதொரு எதிர்பாராச் சக்திப்பு.

டாக்டர் நாகசுந்தரம் மாயவரம் சக்திப்புக் கூடத்திலே டாக்டர் ஊர்மிளாவைச் சந்தித்தார். விதி பிரித்துவிட்டதற் கப்பால், பலமாதங்கள் கழித்து இருவரின் சந்திப்பும் வாய்த்தது. தாம் வேருேர் இடத்தில் பெண் பார்த்துத் மணம் செய்து கொண்டதாகவும், சுகமாக இருப்பதாக வும் தெரிவித்தார் டாக்டர். அது பொய்’ என்று அவளுக்கு எங்ஙனம் தெரியும் ?

?

“ நான் ஒரு எம். பி. பி. எஸ். டாக்டரையே மணந்து கொண்டிருக்கிறேன் !’

டாக்டர் நாகசுந்தரம் ஒருகணம் விம்மினர். ஊர்மிளா வின் வெண்கிறக்கோலம் அவரை அவ்வாறு ஆக்கியது. ‘ஊர்மிளா, உன் கணவர்...?’ என்று மெல்லிய குரலில் கேட்க முனைந்தபோது, ஒருநாள் இதே ஊர்மிளா இருவரும் கல்யாண்ம் செய்துகொண்டால், கம்மில் யாராவது ஒருவர் -நீங்களோ, நானே உடனடியாக இறக்க நேரிடுமென் கிறார் சோதிடர் 1’ என்று சுட்டிய பழங்கதை, சட்டை உரித்துக் காட்டியது. ‘ஊர்மிளா ! .ஊர்மிளா !”

உயிலில் கையெழுத்து வாங்கவேண்டி வந்தார் பால்ராஜ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/84&oldid=684469" இலிருந்து மீள்விக்கப்பட்டது