பக்கம்:வேனில் விழா.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிக்காட்டு ராணி!

மூன்றுமாத இடைவேளைக்குப்பின், பூவைமாநகர் சென் றேன். எந்தவிதப் புதுமாற்றத்தையும் அங்குக் காண வில்லை என்றாலும், பிறந்த மண் என்னும் பாசமும் பிணைப்பும் எனக்குப் புதுரத்தமாயின. இயந்திர மனிதனின் செயற்கை யான மலர்ச்சிக்கு இயல்பாக புது மலர்ச்சி கிடைத்தது. போதுமே ஊரில் என் வாழ்வில் பங்கு கொண்டவள், உடன் பிறந்த தங்கைகள், அவர்களின் செல்வக் குழந்தை கள், உற்றார் உறவினர் ஆகியவர்களும் என்னைப் பற்றிய பாசத்திலும் பிணைப்பிலும் பங்கு கொண்டவர்கள்

பட்டணத்தில் வாங்கிய துணிமணிகள், பழங்கள், பிஸ்கெட்டுகளே அவர்களுக்களிக்கப் பிரித்துக்கொண் டிருந்த எனக்கு ஏதோ ஒரு நினைவு உந்தியது ; திரும்பி னேன்; கடத்துச் சுவரிலுள்ள அந்தப் போட்டோவில் அந்த அழகி சிரித்துக்கொண் டிருந்தாள். ‘சுபத்திரை!” என்ற ஐந்தெழுத்துப் பெயரை என் உள்மனம் மாத்திரம் கேட்கு மளவுக்குச் சொல்லிக்கொண்டேன்.

  • அமிர்தம், வழக்கம்போல இதையெல்லாம் பங்கீடு செய்துக் கொடுத்துவிடு. குழந்தைகளே முதலில் கவனி. கான் கடைத்தெருப் பக்கம் போய் வருகிறேன். அப்படியே சுபத்திரையையும் பாாத்து வருகிறேன். இரண்டு ஆப்பிள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/87&oldid=684472" இலிருந்து மீள்விக்கப்பட்டது