பக்கம்:வேனில் விழா.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 87

பழங்களே மட்டும் தனியே எடுத்து வை ’’ என்று சொல்லி விட்டு நான் உடை மாற்றினேன்.

‘ அத்தான், சுபத்திரை என்றதும் எனக்கு நினைவு வருகிறது. இதோ பாருங்கள் இதை...” என்று சொல்லி விட்டு, அமிர்தம் என்னிடம் கல்யாணப் பத்திரிகை ஒன்றை நீட்டினுள்.

“...சிரஞ்சீவி ஒப்பிலாமணிக்கும், செளபாக்கியவதி சுபத்திரைக்கும்...” என்ற வரிகளே மட்டுமே நான்பார்வை யிட்டேன். மகிழ்வு துளிர் விட்ட என் மனத்தில் ஒருவித கிம்மதியும் படர்ந்தது. சுபத்திரையும் அவள் காதலனும் நீடுவாழ என்மனம் எண்ணமிட்டது. கினேவுகள் பசுமை

பெற்றன.

இளைஞர் சங்கப் பாதை என்றால் எங்கள் ஊருக்குப் பெரிய ராஜ வீதி பட்டபாடுதான். கதர்க்கடை, பள்ளிக் கடம், ஜில்லா போர்டு, ஆஸ்பத்திரி எல்லாம் அங்குதான் உண்டு. அப்படிப்பட்ட இடத்தில் தான் அந்த டிக்கடை இருந்தது. டி என்றால் அப்படிப்பட்ட டி சுபத்திரையின் தளிர்க்கரங்கள் தயாரிக்கும் “சாயா'வென் ருல் பின் சும்மா வா ? சுபத்திரையின் விதவைத் தாய்க்கிழவிதான் கடைக் கல்லாவுக்குப் பொறுப்பு மற்றப்படி எல்லாவேலைகளும் சுபத் திரையின் பொறுப்புத்தான். சுபத்திரை கல்ல அழகு ; பட்டிக்காட்டில் இடம் தவறிப் பிறந்துவிட்ட அழகு ரோஜாைைவ நான் காட்டு ரோஜா என்றுதான் அழைக்க வேண்டியிருக்கிறது. கள்ளங்கபடின்றி சதா ஓடியாடித் திரி யும் வானம்பாடி அவள் ; வயதையும் தாண்டி வம்பளக்கும் குணம் அவளுக்கு உண்டு. தூய்மை படிந்த உள்ளம். எங்கள் சுற்று வட்டத்தின் ராணி ஆம் , தனிக்காட்டு ராணி !...அவள் என்றால் எனக்கு உயிா. உடன் பிறந்தது போல ஒரு கூட்டுறவு : சிநேகிதியின் பாங்கில் பழகும் ஓர் இணைப்பு. அப்பொழுது வேலைபார்த்த பத்திரிகையில் அவளுக்கும் ஒவ்வோர் இதழ் அனுப்புமாறு கேட்டுக் கொண்டாள். நான் லீவுக்கு வரும் போதெல்லாம் அவள் ரசனையை என்னிடம் விமரிசனம் செய்வாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/88&oldid=684473" இலிருந்து மீள்விக்கப்பட்டது