பக்கம்:வேனில் விழா.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தனிக்காட்டு ராணி !

‘ஸார், நீங்க ரொம்ப பெரிய ஸார்தானுக்கும் ஒவ்வொரு கதையிலும் உங்களுக்கு என் பெயர்தான அகப்பட்டது? என்னையே அச்சாய் அப்படியே படம் பிடிச்சு அழகா வர் னிக்கிறீங்களே...! அப்படின்னு, பட்டனைத்துக்குப் போனுக் கடிட உங்க அமிர்தம் ஆச்சியோடு என்னேயும் கினைத்துக் கொள்வீங்களா, ஸார்?...” என்று இப்படி என்னவெல் லாமோ பேசுவாள்.

‘சுபத்திரைக்கு வாய்ப்பூட்டுப் போட, என்றுதான் சிலோனிலிருந்து அந்த ஒப்பிலாமணி வரப் போகிருனே...? வரட்டும், வரட்டும் என்ன சுபத்திரை, அவனுக்கு ஒரு தந்தி கொடுத்து வைக்கட்டுமா...?’ என்று நான் சொன்ன தான் தாமதம், அவள் முகம் குங்குமச் சிவப்பேறி ஒளிவிட்டு கிற்கும்.

ஒப்பிலாமணியைப் பற்றிச் சொல்ல வேண்டாமா? எங்களுர் ஆவுடை அம்பலக்காரரின் ஒரே பிள்ளை. அவன். இளங்காளே. நல்லபடிப்பு. சின்ன வயசில் அக்கரைச் சீமைக்குச் சென்றவன். ஆறு வருஷங்கழித்து அப்பொழுது தான் திரும்பிஞன். ஒப்பிலாமணிக்கு முறைப்பெண் சுபத் திரை. அவனுக்கு அவள் அத்தை பெண். பருவ வயதை எண்ணி, அம்பலமும் தன் தமக்கையிடம் ஆலோசித்து, ‘குழந்தைகளின் கல்யாணத்தை கடத்திவிட வேண்டு மென்று தீர்மானம் பண்ணினன். அதன் பேரில்தான், தந்தி கொடுத்து, ஒப்பிலாமணியை அக்கரைச் சீமையிலிருந்து வரவழைத்திருந்தனர்.

“அத்தான், உங்களுக்குச் சேதி தெரியாதா?... கம்ப சுபத்திரைக்கும் ஒப்பிலாமணிக்கும்...”

“அதுதான் இன்விடேஷனப் பார்த்தவுடனேயே புரி கிறதே, அமிர்தம் பொங்கல் கழித்து, அடுத்த வாரம் தங்கி சுபத்திரை - ஒப்பிலாமணி கல்யாணத்துக்கு இருந்து விட்டுத்தான் மெட்ராஸ் புறப்படப் போகிறேன்...!”

அமிர்தம் இடை மறித்தாள். “அத்தான், நான் சொல்ல வந்ததையும் கொஞ்சம் கேளுங்களேன்! சுபத்திரை-ஒப்பிலாமணி கலியாணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/89&oldid=684474" இலிருந்து மீள்விக்கப்பட்டது