பக்கம்:வேனில் விழா.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 89

கல்லபடியாக கடந்து முடிஞ்சுவிட்டால், அது மாரியம்மன் தெய்வத்தின் கிருபைதான்! கேற்று ராத்திரி கம் ஊரே அமளிப்பட்டுவிட்டது. மஞ்சி விரட்டுக்காக காட்டாண்மைக் காரர் கூட்டம் போட்டபோது, சிலட்டுர் கங்காணி வீட்டுப் பூரணிக்காளேயை யாராலே பிடிக்க முடிகிறதோ என்ற பேச்சுத் தொடங்கியதாம். இளவட்டங்களும் சின்னஞ் சிறிசு களும் ஆண்களும் பெண்களுமாகக் கூடிக் கூடிப் பேசிஞர் கள். அப்பொழுது ஒப்பிலாமணி எழுந்து இளமீசையைக் கோதிவிட்டபடி, “நான் மஞ்சி விரட்டிலே கங்காணியின், பூரணியைப் பிடிச்சு, சாயத் துணியை அவிழ்த்து, பரிசுப் பணத்தையும் தட்டிக்கிட்டுப் போயிடறேன்...” என்றான்.

இந்தப் பெண் சுபத்திாை மருக்கொழுந்து வாசனை காட்டி வந்தவள், அந்த ஊர்க்கட்டத்திலுமா தன் குறும் பைக் காட்டவேணும்? உடனே அது எழுந்து, “ம்.சும்மா வீராப்பு பேசாதீங்க, மச்சான்! உங்களுக்கு முன்னுடி அக் தப் பூரணியை கான் தானுக்கும் பிடிச்சுக் கெலிக்கப் போறேன்......” என்று பதில் சவால் விடுத்தது! காதலர் களுக்குள் எழுந்த விளையாட்டுப் பேச்சு கடைசியில் இப்படி வினையாக முளேக்குமென்று யாருமே கினைக்கவில்லை. ஒப்பி லாமணி கோபத்துடன் திரும்பி, ‘சுபத்திரை, உன் சப’ தத்தை கெஞ்சிலே எழுதிவச்சுக்க, மஞ்சி விரட்டிலே அந்தப் பூரணிக் காளையை நான் பிடிச்சு வெற்றி கொண் டால்தான், உன் கையை நான் பிடிப்பேன், கெட்டுமேளம் முழங்க...மாரியம்மன் பேரிலே ஆணை இது...!...” என்று கன்த்த குரலில் பேசினன். பதிலுக்கு அந்தப் பெண்ணும் காளையப் பொழுது விடுஞ்சு மஞ்சிவிரட்டிலே பாத்தாத்தான் தெரியப் போகுதே நீங்க கெலிக்கிறீங்களா, இல்லே இந்தக் குட்டி கெலிக்கப் போவுதான்னு......! உங்க சபதத்துக்கு இந்தப் பொண்ணு ஒண்னும் மலச்சிடாது, மச்சான்! நான் மஞ்சிவிரட்டிலே வெற்றி கண்டால்தான், நானும் உங்களைக் கண்ணுலம் கட்டிக்குவேன்......! இதுவும் ஆத்தா பேரிலே வச்சுச் சொல்லுற ஆனேதான்...!’ என்று மஞ்சள் பூசிய வதனம் சிவக்க எதிர்ச் சபதமும் ஆணையும் சொல்லிவிட் டாள்...! இதுதான் கடந்த கதை. அடுத்த வாரம் புருஷனும் பெண்டாட்டியுமாக ஆகவேண்டிய ஒப்பிலாமணியும் சுபத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/90&oldid=684476" இலிருந்து மீள்விக்கப்பட்டது