பக்கம்:வேனில் விழா.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 9 |

புரிந்த பிள்ளை, இப்படிக் கோபப் படலாமா? நாளே கணவ னும் மனைவியுமாகப் போகிற உங்களுக்குள் கல்யாணத் துக்கு முக்தியே இப்படி ஊடல் விளைந்து விட்டால்...” என்று மெல்லச் சிரித்தேன்.

‘ஸார், நீங்க கையாண்டி பண்ண ஆரம்பிச்சிட்டிங் களே?...ஆன இந்தச் சங்கதியிலே கேலிக்கும் கூத்துக்கும் வழியே இல்லைங்க. கேற்று கடந்த சேதியிலே என் பேரிலே இம்மிக-டக் குற்றம் கிடையாது. மஞ்சி விரட்டிலே கான் கங்காணியி ன பூரணியைப் பிடிச்சு, சாயத் துணியையும் பரிசுப் பணத்தையும் அடைவேன்னு சொன்னேன். இதிலே அந்தக் குறும்புக்காரக் குட்டி குறுக்கிட்டுப் பேசி, என்னுலே காளையைப் பிடிக்க ஏலாதுன்னு எதிர்ச்சவால் விடுக்க, ஏதுங்க கியாயம்? மஞ்சிவிரட்டிலே காளையை அதுதான் பிடிச்சுக் கெலிக்கப் போவுதாம். கெலிச்சாத்தான் என்&னக் கட்டிக்குமாம்...... பார்க்கலாமே, யார் ஆணையும் சபதமும் கிறைவேறுதின்னு ஸார், என் வாக்கைக காப்பாத்தினுல் தான் காளைக்கு என் வயசுப் பையன்கள் முன்னே நான் தலைகாட்ட முடியும்? மஞ்சிவிரட்டிலே கான் வெற்றி கண் டாத்தான், சுபத்திரையையும் கைப்பிடிப்பேன். என் ஆணை யும் கிறைவேறும்......! நீங்களே சொல்லுங்க, ஊர்க்கூட் டத்திலே ஒரு பொண்ணு என்னச் சவால் விடுகிறதுன் ணு என் மனம் பொறுக்குங்களா?... ஆத்தா எழுதியிருக்கும் விதிப்படிதானே அத்தனையும் கடக்கும்?...கான் வரே


னுங்க...!

ஒப்பிலாமணியின் பேச்சில்தான் எத்தகைய ஆத்திரம் கொங் தளிக்கிறது? சொன்ன சொல்லுக்கு, சுபத்திரையின் சார்பில் ஆறுதலும் அமைதியும் கூறக்கூட வழி வைக்கா மல் பேசிய பேச்சுடன் மறைந்து விட்டானே...!

சுபத்திரையைப் பார்த்தேன். வழக்கமாகக் கோல மிடும் அத்தனே குறும்பும் இப்போது அவளிடமிருந்து எங் குத்தான் விடை பெற்றுச் சென்றுவிட்டதோ? அழகைத் துணை கொண்டிருந்தவள் அப்போது தனிமையைத் துணை கொண்டாள்!... ... “ -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/92&oldid=684478" இலிருந்து மீள்விக்கப்பட்டது