பக்கம்:வேனில் விழா.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 95

தைரியமூட்டி, ஓசைப்படுத்தினர்கள், சபாசு, சுபத்திரை! ஒடு...கீதான் வீராங்கனயாகப் போகிறாய். பரிசு உனக்கே தான்!” என்று.

நான் யாருக்கு உற்சாகமூட்ட முடியும்? இரண்டு கண் களும் எனக்கு ஒரு மாதிரி அல்லவோ? தெய்வமே விஷப் பரீட்சையாகி விடமாட்டாதே என் கனவு.

பூரணியை நெருங்கிப் பிடித்துவிட்டனர் ஒப்பிலாமணி யும் சுபத்திரையும்!

நான் கண்களைத் திறந்தேன்.

ஒப்பிலாமணியும் சுபத்திரையும் என் முன் கின் ருர்கள்.

“ஸார், நான்தான் ஜெயித்தேன்!” என்றான் ஒப்பிலா மணி.

‘ஐயா, கான்தான் ஜெயித்தேன்!” என்றாள் சுபத்

திரை.

என்ன, அதிசயக் கூத்தாக இருக்கிறதே ஒரே சம யத்தில் நீங்கள் இருவரும் ஜெயிப்பதாவது?’ என்று கேட் டுக் கொண்டே, இருவரையும் பார்த்தேன். என்ன ஆச்சரி யம்! ஒப்பிலாமணியின் கையில் ஒரு சாயத்துண்டும், நூறு ரூபாய் கோட்டும் இருந்தது. அதேபோல, சுபத்திரையும் அதேமாதிரி சாயத்துண்டும, நூறு ரூபாய் கோட்டும் வைத் திருந்திாள்!

அப்பொழுது ஒப்பிலாமணியும் சுபத்திரையும் அதிசயம் குமிழ்விட, ஆச்சரியம் புதிர்போட, ஒருவரை யொருவர். பார்த்துக் கொண்டார்கள்.

‘கான்தான் முதலில் வெற்றிக் கொண்டவன்; சுபத் திரையிடமுள்ள சாயத்துணியும் பணமும் கங்காணியுடைய தில்லை. இதிலே ஏதோ சூது இருக்குது...” என்று முழங்கி ஞன் ஒப்பிலாமணி. .

இவருக்கு முந்தி நான்தான் சாயத்துணியையும் பணத்தையும் பெற்றவள். கங்காணியுடைய முத்திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/96&oldid=684482" இலிருந்து மீள்விக்கப்பட்டது