பக்கம்:வேனில் விழா.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தனிக்காட்டு ராணி

துணியிலும் கோட்டிலும் இருக்குதே, இதோ...! அவர்தான் ஏதோ சூது பண்ணியிருக்கார்...” என்று கூவினுள் சுபத் திரை.

அவர்கள் இருவரும் வைத்திருந்த இரண்டு சாயத் துண்டிலும் நூறுரூபாய் கோட்டு இரண்டிலும் கங்காணி யின் அடையாள முத்திரைகள் இருந்தன தங்கள் இருவரில் யாருடையதும் சூதில்லை என்பதை உணந்ததும், ஒப்பிலா மணியும் சுபத்திரையும் ஆச்சரியத்துடன் ஒருவரையொரு வர் பார்த்துக் கொண்டே பதுமைகளாக கின் ருர்கள்.ஆளுல், பூரணியின் கழுத்தில் எப்படி இரண்டு செட் சாயத் துணி களும், நூறு ரூபாய் கோட்டுகளும் இருந்தன என்றுதான் இவர்களிருவருக்கும் புரியவில்லை!

கங்காணி வந்தார்; என்னைப் பார்த்தார்; கண் சிமிட்டி ஞர்; சிரித்தார்.

கங்காணி பேசிஞர். தங்கப்பற்கள் சிரித்தன.

‘ஒப்பிலாமணி, சுபத்திரை!...இன்றைய மஞ்சிவிரட் டிலே என் பூரணியைப் பிடித்து வெற்றி கொண்ட பெருமை உங்கள் இருவருக்குமே சம அளவில் உண்டுதான்! உங்கள் இருவர் கையிலுமுள்ள சாயத்துண்டுகளும் நூறு ரூபாய் கோட்டுகளும் என் பரிசுதான்! அதிசயமாகவிருக்கும் உங்கள் இருவருக்கும்! ஒரே சமயத்தில் நீங்கள் போட்டுக் கொண்ட சபதங்கள் இரண்டும் கிறைவேறிஞல்தானே நீங்கள் இருவரும் கணவன்-மனைவியாக முடியும் இப்போது உங்கள் இருவரின் ஆனையும் பலித்துவிட்டதல்லவா? பரிசு கள் இரண்டும்தான் உங்கள் இருவர் கைகளிலும் திகழ்கின் றனவே...! ஒஹோ! இரட்டைப் பரிசுகளின் ரகசியம் தானே- இதோ சொல்லுகிறேன்: உங்கள் இருவரது சபதம் எத்தனை விபரீதம் கொண்டது பூரணிக் காளையின் கழுத்கில் இந்த இரட்டைப் பரிசுகளையும் கட்டியது நானே தான்... காளையோடு போராடிய நீங்கள் இருவரும் எங்கே இந்த ரகசியத்தைக் கண்டிருக்கப் போகிறீர்கள்...? ஒரே இபாட்டு நேரத்தில் இரண்டு பரிசுகளும் ஆளுக்கு ஒன்றாகச் சொல்லி வைத்த மாதிரி உங்கள் கைகளில் வந்தவரை ரகசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/97&oldid=684483" இலிருந்து மீள்விக்கப்பட்டது