பக்கம்:வேனில் விழா.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 97

யம் வெளிப்படவில்லை, அப்பொழுது ஊராருக்கு உங்கள் இருவரையும் தம்பதிகளாக ஆக்க வேண்டுமென்பதே ஒரே ஆசை! ஊராரின் ஒப்புதல் படிதான் கானும் அப்படிச் செய் தேன். அத்துடன் பூரணியின் திமிரும் சொரத்தும் குறைய மயக்க மருந்தும் கொடுத்தேன்; வழக்கமாகப் பரிசைத் தட்டிக்கொண்டு செல்லும் சூரர்களையும் காரணத்தை விளக் கிச் சமாதானப்படுத்தி, மஞ்சிவிரட்டில் கலந்து கொள்ளு வதைப் போல சும்மா பாசாங்கு செய்யவும் வேண்டிக் கொண்டேன்! ஒப்பிலாமணி, சுபத்திரை...! வருகிற முகடர்த் தத்துக்கு நீங்கள் இருவரும் மணவறையில் அமர இனியும் அட்டியில்லையல்லவா?...முதலில் உங்கள் இருவரின் நன்றி யையும் இந்தக் கதாசிரியர் அவர்களுக்குத் தெரிவித்து விடுங்கள்!உங்கள் சபதங்கள் சுலபமாக வெற்றிபெற, எனக் குச் சகலயோசனைகளையும் சொல்லிக் கொடுத்தது இந்த ஸார்தான்! எழுத்தாளரென்றால் பின் சாதாரணமா?... என்னவோ, இகதப் புதுமணக் காதலர்களின் கனவுகள் பலித்துவிட்டது. எல்லாம் அம்பாளுடைய கிருபைதான்!... சுபத்திரை என்றென்றும் மஞ்சளும் மருக்கொழுந்தும் திகழ வாழ்த்துகிறேன்!...”

இலங்கைச் சீமைத் தமிழ் ஆறுதல் பூத்தது!...

சுபத்திரையும் ஒப்பிலாமணியும் மஞ்சளின் நல்ல சகு னம் துலங்கச் சிரித்து, கள்ளவிழிப் பார்வைகளைப் பரிவர்த் தன செய்தவாறு மருக்கொழுந்தின் மணத்தை நுகர்ந்து மகிழ்ந்தார்கள்!

ஆஹா! என்னுடைய ஆனந்தத்திற்கு எல்லை எது?

மணவறையில் அழகுக்குக் கிடைத்த அழகின் துணை யுடன் சுபத்திரை குந்தியிருக்க, அவளுக்கு அருகாக, ஒப்பி லாமணி வீற்றிருக்தான்-தனிக்காட்டு ராணிக்கு வாய்த் திட்ட தனிக்காட்டு ராஜாவாக!...

சுபத்திரை!...”

• ‘i:12?

ஒப்பிலாமணி!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/98&oldid=684484" இலிருந்து மீள்விக்கப்பட்டது