பக்கம்:வேமனர்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கர்நூல்: இராயர் சீமையின் மாவட்டத் தலைநகரம்; மாவட்டத்தின் பெயரும் இதுவே. கி.பி. 1953 அக்டோபருக்கும் 1956 அக்டோபருக்கும் இடையிலுள்ள காலத்தில், அதாவது ஆந்திர மாநிலம் அமைக்கப் பெற்ற பின்பும் விசாலாந்திரப் பிரதேசம் உண்டாவதற்கு முன்பும் கர்நூல் மாநிலத்தின் தலைநகராக இருந்து வந்தது.

காக்கத்தியப் பேரரசு: கி.பி. 11-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெட்ராஜு என்பவரால் நிறுவப் பெற்றது. இதன் தலைநகர் வாரங்கல். பிரதாபருத்திரன் ஆட்சியில் இவன் டெல்லி சுல்தானாகிய கியாஸ் உத்தீன் துக்களக்கின் மகன் உலூக் கான் என்பானால் ஒரு போரில் தோற்கடிக்கப் பெற்றான். இத்துடன் இப் பேரரசும் அழிந்தது. காக்கத்தியப் பேரரசு சிறப்புடன் திகழ்ந்த காலத்தில் இது திரிசிராப்பள்ளி வரையிலும் விரிந்து கிட்டத்தட்ட தென்னிந்தியா முழுவதையும் தன்னாட்சியின் கீழ்க் கொண்டிருந்தது.

காளிதாசர்: இந்தியாவின் தலைசிறந்த சமஸ்கிருதக் கவிஞர்; நாடக ஆசிரியர். இவருடைய இலக்கியங்கள் பழைய சமஸ்கிருதக் கவிதை, நாடகங்களின் கொடுமுடிகள் என்று பொதுவாகப் போற்றப் பெறுகின்றன. இவர் பிறப்பும் இறப்பும் இன்னும் தெளிவாக அறுதியிடப் பெறவில்லை. ஆயினும் குப்தர்களின் ஆட்சிக் காலத்தில், கி.பி. 4-ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 5-ம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில், இவர் வாழ்ந்திருக்கக் கூடும் எனக் கருதப் பெறுகின்றது. இவருடைய தலைசிறந்த நாடகம் சாகுந்தலம். இவருடைய புகழ் பெற்ற கவிதை மேகதூதம் என்பது. வழக்கிலுள்ள இவரது நூல்கள் யாவும் ஆங்கிலம் உட்படப் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பெற்றுள்ளன.

காந்தியடிகள்: இவரது முழுப் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (கி.பி. 1869-1948) என்பது. இக்காலத்திய ஞானி; மகாத்மா. தம்முடைய அகிம்சைப் போராட்ட முறையில் இந்தியா சுதந்திரம் அடையச் செய்தவர். கி.பி. 1948 சனவரி 30-ம் நாள் இந்து வெறியன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பெற்றார்.

கிரியர்சன், சர் ஜார்ஜ் ஆப்ரகாம் (கி.பி. 1851-1941): பல சிறப்புகளுடன் பொருந்திய கற்று உணர்ந்த அறிஞராகிய இவர் கி.பி. 1873-ல் இந்தியன் சிவில் சர்வீஸ் (ஐ.சி.எஸ்.) அலுவலராகச் சேர்ந்து 1903ல் ஒய்வு பெற்றவர். ஆங்கிலமும் இந்துஸ்தானியும் உட்படப் பல்வேறு இந்திய மொழி

106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/113&oldid=1282644" இலிருந்து மீள்விக்கப்பட்டது