பக்கம்:வேமனர்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போன பல யாத்திரிகர்களுள் ஒருவர். இப்பொழுது நீர்மின்சாரத் திட்டம் ஒன்று இங்குச் செயற்படுகின்றது.

சிரீநாதர் (கி.பி. 1365-1440): அரசர்களின் நண்பரும் அவர்களின் தனிப் பற்றுக்குரியவருமான இவர் ஒரு நாடோடி; ஒரு பெருங் கவிஞர். தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் சரி சமமான புலமையுடையவர். எவரும் திகைக்கும்படியான சொகுசு வாழ்க்கை வாழ்ந்து, வறுமையிலும் நண்பர்களின்றியும் மடிந்தவர்.

சிரிபதி (பண்டித): தெலுங்கு எழுத்தாளர்களில் சைவ சமயத்தை பற்றி முதன் முதலாக எழுதியவர். பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பாதியில் 'சிவதீபிகை' என்ற நூலை எழுதினவர்.

சிவன்: ('ஷிவன்’ எனவும் உச்சரிப்பதுண்டு): தொடக்கத்தில் இவர் ஆரியரின் கடவுள் அல்லர். 'திரிமூர்த்தி' என்ற கருத்து எழுந்த காலத்திலிருந்து, அதாவது பிரமன் படைப்புக் கடவுளாகவும், விஷ்ணு காக்கும் கடவுளாகவும், சிவன் அழிக்கும் கடவுளாகவும் கருதிய காலம் முதல், சிவன் திரி மூர்த்திகளில் ஒருவராக இடம் பெற்றார். ஆனால் சமயப் பற்றுடன் சிவனை வழிபடுவோர் இந்தப் பிரிவினைச் செயல்களையோ, அல்லது பொதுவாக்த் தம்முடைய கடவுளுக்கு அப்பால் விஷ்ணுவிற்கு முந்து நிலையைத் தருவதையோ ஒப்புக் கொள்வதில்லை. இவர்கட்குச் சிவனே முழு முதற் கடவுள். திரிமூர்த்திகளின் மூன்று செயல்களையும் இவர் ஒருவரே மேற்கொள்கிறார் என்று கருதுபவர்கள். 'சிவன்’ என்ற சொல்லுக்கு 'நற்குறியான’ என்பது சரியான பொருள்.

சிவன்ராத்திரி (ஷிவன்ராத்திரி எனவும் உச்சரிப்பதுண்டு): மாசி மாதத்தில் (பிப்ரவரி-மார்ச்சு) தேய் பிறையின் பதினான்காவது இரவு. சிவனை வழிபடும் பக்தர்கள் பகல் முழுவதும் பட்டினி கிடந்து இரவு முழுவதும் விழித்திருப்பர்.

சூத்திரர்: இந்துத் திருமறைகளின்படி முதன்முதலாக பிராமணர்கள் பிரமனின் வாயினின்றும், ஷத்திரியர்கள் அவருடைய புயங்களினின்றும், வைசியர்கள் அவருடைய வயிற்றினின்றும், சூத்திரர்கள் அவருடைய காலடிகளினின்றும் தோன்றினர். இவர்களுடைய தாழ்வான இடத் தோற்றத்தின் காரணமாக இவர்கள் சாதி அமைப்பில் இயல்பாகவே தாழ்வான நிலையை அடைந்தாக வேண்டும். தீண்டத்தகாதவர்களான இவர்கள் பிரமனுடைய பிள்ளைகள் இலராதலின் இவர்கள் சாதிகளினின்றும் நீக்கப் பெற்றனர்.

109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/116&oldid=1256288" இலிருந்து மீள்விக்கப்பட்டது