பக்கம்:வேமனர்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோமநாதர், பால்குரிக்கி: தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் இம்மொழிகளின் வளமான எழுத்தாளரான இவர் வீரசைவ சமயத்தைத் தீவிரமாகப் பரப்பி வந்தவர். பசவ புராணத்தைத் தவிர, இவர் எழுதிய வேறு பெரிய நூல்கள் பண்டித ராத்ய சரித்திரம், அனுபவசாரம் என்பவையாகும். இவர் பசவரின் சீடர்.

சைத்தன்யர் (கி.பி. 1486-1533): வங்காள ஞானியர்களுள் இவர் மிக மிகப் புகழ் பெற்றவர். தம்முடைய வாழ்க்கையாலும். போதனையாலும், வங்காளம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், வேறு பகுதிகள் ஆகிய இடங்களிலுள்ள பல்வேறு கவிஞர்களை மிகச் சிறந்த பக்திப் பாடல்களை எழுதுவதில் ஊக்குவித்தவர். மனைவி தன் கணவனைச் சரணம் அடைவதைப் போலவே இறைவனிடம் முழு நிறைவான சரணம் அடைதல் வேண்டும் என்பது இவர் கூறும் செய்தியின் அடிப்படையான குறிப்பாகும். இந்தியா முழுவதிலும் சைத்தன்ய வழிபாட்டு முறையைத் தழுவியவர்கள் பல கோடி மக்களாவர்.

சைவர்கள்: சிவனை வழிபடுவோர் சைவர்கள் என வழங்கப்படுகின்றனர். இவர்களுள் எதிர்ப்பார்வமுள்ள பகுதியினர் வீரசைவர்களாவர்.

ஞானதேவர் (கி.பி. 1275-1295): மராட்டிய ஞானியருள் தலை சிறந்தவர். இவர் பல்வேறு நூல்களின் ஆசிரியர். பகவத் கீதையின் உரையான ஞானேஸ்வரி என்ற நூல் இவற்றுள் மிகச் சிறந்ததாகும்.

டுபாய்ஸ், ஜே. பி.: கிட்டத்தட்ட கி.பி.1770-ல் பிறந்த இவர் ஒரு ஃபிரெஞ்சு மதகுரு. தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட இவர் முப்பத்தொரு ஆண்டுகள் கிறித்தவ சமயப் பரப்பாளராகக் காலங் கழித்தார். உள்ளுருக் கொத்த ஆடையணிந்து உள் நாட்டுப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டு சாதாரண மக்களிடையே அவர்களுள் ஒருவராக வாழ்ந்தார். இவருடைய "இக்துக்களின் தோரணைகளும், பழக்கங்களும், ஆசாரங்களும்" என்ற நூல் கி.பி. 1792-க்கும் 1823க்கும் இடையில் வாழ்ந்த இந்துச் சமூகத்தினரைப் பற்றிய நம்பகமான செய்தியைத் தருகின்றது.

தண்டி: அணி இலக்கண ஆசிரியர். இவருடைய காலம் இன்னும் உயிருள்ள வாதத்திலேயே உள்ளது. இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்திருத்தல் கூடும்.

தர்மசாத்திரங்கள்: இந்துக்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறிலும் அவர்களை நெறிப் படுத்துவதற்காக அமைந்த சட்டத்

110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/117&oldid=1256289" இலிருந்து மீள்விக்கப்பட்டது