பக்கம்:வேமனர்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மரியாதையுடன் மகாத்மா என்று விளிக்கப் பெறுகின்றார், இக் காலத்தில் காந்தியடிகள் ஒரு மகாத்மாவாக இருந்தார்.

மகாபாரதம்: இராமாயணத்தைப் போலவே, மகாபாரதமும் இந்தியாவின் மிகச் சிறந்த சமஸ்கிருதப் பெருங் காப்பியமாகும். இன்றைய வடிவில் இலியத்தும் ஒடிஸ்ஸியும் சேர்ந்த அளவைவிட எண்மடங்கு பெரியது. மரபுப்படி இதன் ஆசிரியர் மிகப் பழைய முனிவராகிய வியாசர் என்பவர். இந்நூலின் காலம் தெரியவில்லை; ஆனால் சில புலவர்கள் "இதன் தொகுப்பு கி.மு. நான்காம் நூற்றாண்டிற்கும் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் படிப்படியாக இன்றைய வடிவத்தை அடைந்திருக்க வேண்டும்" என்ற முடிவுக்கு வந்துள்ளனர் (எம். வின்டர்னிட்ஸ்).

மகுடம்: ஒரு கிரீடம். தலைப்பு அல்லது பல்லவி எனவும் பொருள்படும்.

மசுலிப்பட்டணம்: ஆந்திரத்தில் கிருஷ்ணா மாவட்டத்தின் தலைநகர். இஃது ஒரு கடற்கரை நகரம். பெரிய துறைமுகமும் இங்கு உண்டு. 17, 18-ம் நூற்றாண்டுகளில் போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஃபிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் இவர்களிடையே நேரிட்ட வாணிக, அரசியல் ஆதிக்கத்தின் காரணமாக அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. மசுலிப் பட்டினம் என்பது 'மச்சிலிப் பட்டினம் (மீன் பட்டினம்) என்பதன் திரிந்த வடிவம். பண்டைக் காலத்து கிரேக்கப் புவியியல் வல்லுநர்கள் இதனை 'மசலியா அல்லது "மைசோலியா' என்று குறிப்பிட்டுள்ளனர்.

மல்லி: பூத்த மல்லிகை மலர். இதன் கொடிக்கும் இப்பெயர் வழங்குகின்றது.

மல்லிகார்ச்சுனர் (பண்டிதர்): காக்கதீயப் பேரரசர் (கி.பி. 1110. 1158): இரண்டாம் புரோலாவின் காலத்தவர். இவர் சிறந்த புலவர்; வாதமிடுவதில் வல்லவர். தம்முடைய வாதமிடும் திறமையினால் தம் காலத்துப் புத்தசமயத்தினரை பொது மேடையில் வாதங்களில் தோற்றோடச் செய்தார். இவருடைய சிவ தத்துவசாரம் என்ற நூல் சைவ தத்துவத்தை விளக்கும் ஒரு நல்ல ஆய்வு நூல்; இலக்கிய நயமும் செறிந்தது.

மன்மதன்: (காமதேவன் எனவும் வழங்கப்படுவான்): காதல் கடவுள். இவன் என்றும் இளைஞனாகவும், அழகுடையவனாகவும் இருப்பவன்; ஆயினும் இவன் உருவிலியாகக் கருதப்

118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/125&oldid=1256656" இலிருந்து மீள்விக்கப்பட்டது