பக்கம்:வேமனர்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னர் இலக்கிய ஆராய்ச்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். இவர் வெளியிட்ட நூல்களில் வேமனரின் வாழ்க்கை வரலாறு, சதகக் கவிஞர்களைப் பற்றி ஓர் ஆய்வு நூல், தெலுங்கு இலக்கிய வரலாறு என்ற நூல்களும் அடங்கும்.

வசிட்டர்: வேதங்களிலும் புராணங்களிலும் மிக அதிகமாகக் குறிப்பிடப் பெறும் ஒரு பழங்கால முனிவர். இருக்குவேதத்தில் பல பாடல்கள் இவர் பெயரில் உள்ளன. தர்மசாத்திரம் ஒன்று இவர் இயற்றியதாகக் கூறப் பெறுகின்றது. இவர் ஊர்வசியின் மகன். வேதங்களில் வரும் கட்டுக்கதையின்படி மித்திரனும் வருணனும் ஒரு வேள்வி நடந்தபோது ஊர்வசியைக் கண்ணுற்றனர்; அவர்கள் காமவெறி உச்ச நிலையை அடைந்து, இந்திரியம் வெளிப்பட்டது. அவற்றில் ஒரு பகுதி தரையில் விழ, அதனின்றும் வசிட்டர் தோன்றினார். மற்றொரு பகுதி ஒரு சாடியொன்றில் விழ, அது அகத்தியரை உருவாக்கியது. இதனால் கும்பமுனி என்ற பெயர் பெற்றனர் போலும்!

வியாசர்: பராசரரின் நெறியற்ற முறையில் பிறந்தவர்; அதனால் அவர் 'கணினர்' (வைப்பாட்டி மகன்) என வழங்கப் பெறுகின்றார். கருநிறமுடைய இவர் ஒரு தீவில் பிறந்தார்; ஆகவே இவர் 'கிருஷ்ண த்வைபாயனர்' எனவும் வழங்கப் பெறுகின்றார். இவருடைய பல பெயர்களில் வியாசர் அல்லது வேதவியாசர் என்ற பெயரே யாவரும் அறிந்தவை. வேதங்களைத் தொகுத்துப் பாகுபடுத்தி வெளியிட்டதாகக் கருதப் பெறுவதே இதற்குக் காரணம் ஆகும். (வியாசர் என்பதற்கு 'தொகுப்பாளர்' என்பதே உண்மையான பொருள்). மகாபாரதம், பிரம்மசூத்திரங்கள், பதினெட்டு பெரிய புராணங்கள் ஆகியவற்றின் ஆசிரியரும் இவரே எனக் கருதப் பெறுகின்றார்.

விஷ்ணு: இந்துக் கடவுளர்களனைவரிலும் விஷ்ணுவே அதிக பக்தர்களைக் கொண்டுள்ளார். இந்து திரிமூர்த்திகளில் இவரே காக்குங் கடவுள்; தேவைப்படும் போதெல்லாம் தீமையைப் போக்கவும், நன்மையை நிலைநாட்டவும் இப்புவியில் இவர் 'அவதாரம்' செய்வதாக நம்பப் பெறுகின்றது. இவர் இது காறும் ஒன்பது முறை அவதாரம் செய்துள்ளதாகவும், பத்தாவது முறை 'கல்கி' என்ற அவதாரம் செய்வார் எனவும் புராணங்கள் பறை சாற்றுகின்றன.

வீணை: மிகப் பழங்காலமாகவே இந்தியாவில் பயன்படுத்தப்பெறும் நரம்பு இசைக் கருவி. இந்தியக் கலையில் நான்முகனின் துணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/127&oldid=1282646" இலிருந்து மீள்விக்கப்பட்டது