பக்கம்:வேமனர்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேமனர் தெலுங்குப் புலவர் உலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பெற்றிருக்கின்றார்; தொடக்கக்காலத்தில் அவர் புறக்கணிக்கப் பெற்றார்; அல்லது அவர் ஒரு கவிஞரே அல்லர் என்று விலக்கப் பெற்றார். இந்த நிலைமையின் காரணமாக எந்த ஒரு பழங்காலக் கவிஞரோ, அல்லது மிகக் குறைவான நிலையில், துரகராமகவி. எடப்பாடி எர்ரப்பிரகடா போன்ற புலமைசான்ற கவிஞர்களுமோ எண்ணம் உருவாக்குமுறையில் வேமனரைப் பற்றி நன்மதிப்புடன் குறிப்பிடவில்லை. தம்முடைய பெயரில் 'வேமா' என்பதை ஒரு பகுதியாகக் கொண்டு கொண்டவீடு இராஜமகேந்திரபுரம் ஆகிய பகுதிகளை ஆண்ட ரெட்டி அரசர்கள் புலவர்களைப் போற்றும் புரவர்களாகத் திகழ்ந்தனர்; அவர்களுள் சிலர் தம்முடைய உரிமையால் புகழ் மிக்க புலவர்களாகவும் கவிஞர்களாகவும் விளங்கினர். எந்த ஒரு இடைக்கால இலக்கியத்திலும் எந்த ஒரு பூர்வ கவித்துதியிலும் (முற்காலப் புலவர்களைப் போற்றும் துதிப்பாடல்கள்) ‘'வேமரைப்" பற்றிய குறிப்பு அநேகமாக இந்த அரசர் மரபைச் சார்ந்த புலவர்கள், கவிஞர்கள் ஆகிய ஒருவரைப்பற்றிய குறிப்பாகவே இருக்கும்.

வேமனரின் காலத்தைப் பின்னால் தள்ளுவதற்கு வங்கூரியார் பிடிவாதமான முயற்சியை மேற்கொள்ளுதலையும் இரால்ல பள்ளியாரிடம் அதனை முன்னுக்குத் தள்ளும் முனைப்பான போக்கினையும் காணலாம். இரால்லபள்ளியாரின் கருத்துப்படி வேமனர் பதினெட்டாவது நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராதல் வேண்டும். மறுக்க முடியாத சான்றின்மையால் பிடிவாதமாக இருப்பது துடுக்கான செயலாகும்; அவருடைய பிறப்பு பற்றியும் (1652) அவருடைய இறப்பு பற்றியுமான (பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் இருபதாண்டுகள்) தம்முடைய தொடக்கக் கால வெளியீடுகளில் பிரௌன் அவர்கள் கொண்ட காலக் குறிப்புகள் சரியானவையாக இருக்கலாம்.

வேமனரின் பிறப்பிடத்தைப் பற்றிய விஷயத்தில் வேமனரின் பாடல்களில் காணப்பெறும் அகச்சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு வங்கூரியார் அவர் பிறப்பிடம் கொண்ட வீடு என்று சட்டென்று முடிவுகட்டுகின்றார்; ஆனால் இரால்லபள்ளியாரோ மாறுபட்ட சான்றினைக் காணும்வரை கொண்டவீட்டினைக் கவிஞரின் பிறப்பிடமாக ஒப்புக்கொள்ளலாம் என்று இணங்குகின்றார், விரிந்த நிலையில் மாறுபாடுகள் இல்லாத ஆயப்படும் பொருள் இஃது ஒன்றேயாகும். ஆனால் வேமனர் கொண்ட வீடு என்னும் இடத்தில் தமது தொடக்கக் கால வாழ்க்கையைக் கழித்தார் என்றும், ஆனல் அவர் மூகசிந்தப் பள்ளியில் பிறந்தார் என்றும் சிலர் கருதுகின்றனர். வேமனர் சிறு குழந்தையாக இருக்கும்

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/42&oldid=1243365" இலிருந்து மீள்விக்கப்பட்டது