பக்கம்:வேமனர்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5. இருட்படலத்தின் இரட்டை இரவு

"இருட்படலமும் ஒளி மூடாக்குகளும்
கொண்ட இரட்டை இரவு"

-மில்ட்டன்

வேமனரை ஒரு மனிதராகவும், கவிஞராகவும், தத்துவஞானியாகவும் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டுமானால் அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிச் சிறிதளவாவது அறிந்து கொள்ளவேண்டும்; காரணம், அவரது வாழ்க்கை கலை சிந்தனை ஆகியவை அதில் வேர்விட்டுக் கிடக்கின்றன. முரணாகக் காணப்படினும், தனித்திறமையுடையவர் மட்டிலுமே தம் காலத்தில் வேர்களை விட்டும் அதிலிருந்து உயிர் தரும் நீர்மத்தையும் உணவினையும் எடுத்துக்கொண்டு காலத்தையும் கடந்து ஈறில்லாத காலத்திலும் அடியெடுத்து வைக்க முடியும். வேர் இல்லாத மனிதன் மிகச் செழிப்பான திறமைக்கூறுடையவனாக இருந்தபோதிலும், இங்கு இல்லாமலும் அங்கு இல்லாமலும் இருப்பான்; அவன் சாதாரணமாகத் தன்னைக் கடந்து செல்லும் வன்காற்று வீச்சால் அடித்து வீக்கப்பெற்று இறுதியாகச் சூனிய நிலையின் சுற்றுப்புறத்திற்கு வீசிச் செலுத்தப்பெறுவான்.

தம் காலத்தில் உறுதியாக வேரூன்றி நிற்பவராதலின் வேமனர் (தாமஸ் கிரேயைப்பற்றி ராபர்ட் லிண்ட் கூறுவது போல்) தம் அனுபவத்தால் இவ்வாறு அறிந்தார். "கவிதை என்பது வெறுமையான இலக்கியப் பயிற்சியன்று: உண்மையாக இருப்பதன் விம்பக்காட்சியாகும்; காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்ட மாதிரிகளைப் பற்றிய வினை வியந்து பாராட்டலிலும் அது அமையவில்லை. அது தன்னுடைய மூச்சைப் போலவும் நாட்டைப்போலவும் மிக அண்மையிலிருப்பது"; அவர் தம்முடைய கவிதைப் படைப்பில் தம்முடைய காலத்தை முழுமையாக பிரதிபலித்தார். நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் வேமனரின் வாழ்க்கை வரலாறுபற்றிய கதையை அவருடைய கவிதையைத் திறனாய்ந்து கற்றல் மூலம் புதிதாக அமைத்துக் காட்டலாம்; அங்ஙனமே அவர் வாழ்ந்த, எழுதிய, கற்பித்த காலத்தைப் பற்றிய

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/54&oldid=1250764" இலிருந்து மீள்விக்கப்பட்டது