பக்கம்:வேமனர்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாடு உள்ளது? அப்படி இருக்கும்போது இறைவன் பெயரால் ஏன் சச்சரவு செய்துகொள்ளவேண்டும்? அவர் இன்னும் ஒருபடி மேல் சென்று கூறுகின்றார்: "நம்முடைய சமயங்கள் பல; ஆனால் எவையும் உறுதியானவையும் அல்ல, நிலையானவையும் அல்ல. நிலையானவையாக இருப்பவை நம்முடைய நல்வினைகளும் தீவினைகளும் மட்டிலுமே. முடிவான பகுப்பாய்வால் எந்த ஒரு சமயமும் உண்மையைத் தன் உரிமையாகக்கொள்ளவில்லை. சமயத்தின் பால் தனி நலத்தை உரிமையாகக் கொண்டுள்ளவர்களிடம் காரணம் காட்டி வாதிடுவதில் ஒருக்கால் யாதொரு பயனும் இராது எனக் கருதுபவர், சமயவாதிகளிடம் விழிப்புடனிருத்தல் வேண்டுமென்று பொதுமக்களை எச்சரிக்கின்றார். "சமயத்தை வைத்து வாணிகம் செய்து ஏமாற்றுபவர்கள் ஆயிரக்கணக்காக உள்ளனர். அவர்கள் மீன்களைக் கொத்தித் தின்னும் கொக்குக் கூட்டத்தைப் போல் வெளிக்கிளம்பியிருப்பதால் அவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்" என்றும் அவர் கூறுகின்றார்.

சைவமும், வைணவமும் மதிப்பிழந்ததைப்போல் வேதபலிகளும் மீண்டும் நம் கவனத்திற்குமுன் வருகின்றன. பழைய அளவுப்படி இல்லாவிடினும், அவை அடிக்கடிச் செய்யப்பெறுகின்றன. வேமனரும் தாம் ஒளிவுமறைவு இன்றிப் பேசுகின்ற முறையிலேயே பெருகிவரும் இப்போக்கிற்கு எதிராகக் கடிந்து பேசுகின்றார். "மிக உயர்ந்த நிலையில் இருப்பதாகக் கூறும் உங்கள் உரிமை எங்குள்ளது?" என்று வேதப் புரோகிதர்களை நோக்கிக் கேட்கின்றார், "அது பலி என்ற பெயரால் ஆதரவற்ற நிலையிலுள்ள பிராணிகளைக் கொல்லுவதிலும் அவற்றின் இறைச்சியை உங்கள் திருநிலையான நெருப்பில் சுட்டு உண்பதிலும் உள்ளதா?" என்கின்றார். தாக்குதலுக்கு திரும்பியவர், "நீங்கள் உரிமை கொண்டாடுகின்றபடி சிங்கங்கள் போல் பலமாக இருப்பின் ஆதரவற்ற ஆடுகளின் கழுத்துகளை முறுக்கிப் பிழிவதில் சிங்கத்திற்குரிய பலத்தைக்காட்ட முடியுமா?’ என்று கேட்கின்றார். பிறிதோர் இடத்தில், "உயர்தரமான நோக்கத்தில் ஆன்ம தியாகம் பலிகளனைத்திலும் மிகச்சிறந்ததல்லவா?" என்று வினவுகின்றார். வேதபலி இடுபவர் உம்பர் உலகில் அவ்வுலகிற்குரிய ஆடலணங்கான அரம்பையின் காதற்சுகங்களை அனுபவிப்பார் என்று நம்பப்பெறுகின்றது. இந்த நம்பிக்கையைக் குறித்து வேமனர்: "தந்தையும் மகனும் பலிகளை மேற்கொண்டால், இருவரும் உம்பருலகினை அடைந்து, இருவரும் அரம்பையரை அணைவர். இதனால் அவர்கள் தகாப்புணர்ச்சி மேற்கொண்ட குற்றத்திற்கு ஆளாகின்றனரல்லவா? என்று திகைக்கும் வினாவை விடுக்கின்றார். அவர் காலத்திய சமய நம்பிக்கைகளை அடிக்கடியும் விடாதும் பல்வேறு முனைகளில் வேமனர் தாக்குவது அந்த நம்பிக்

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/58&oldid=1250772" இலிருந்து மீள்விக்கப்பட்டது