பக்கம்:வேமனர்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மீன்" என்று கூறுவது மிகச் சரியான மதிப்பீடாகும். புராணத்தையோ, பிரபந்தத்தையோ அவர் எழுதியிராதிருக்கலாம்; எனினும் அவரை உயர்தரக் கவிஞர் என்றே வழங்கலாம். அவர் கவிதை உயர்தர நிறைவை எய்தியுள்ளது. அவர்தரும் செய்தியோ எல்லாவற்றையும் உட்படுத்திய உயர்தரச் செய்தியாக உள்ளது 'ஆங்கில இலக்கிய வரலாறு' என்ற நூலின் கூட்டாசிரியராகிய கலாமியன் என்பவரிடமிருந்து கடன் வாங்கிய தொடரால் குறிப்பிட்டால் வேமனர் உயர்வான உயர்தர மரபுவழி இலக்கியத்தன்மையை எய்தியுள்ளார் எனலாம். ராபர்ட் பர்ன்ஸ் என்பாரைப்பற்றிக் குறிப்பிடும் கஸாமியன் இவ்வாறு கூறுகின்றார்: "பர்ன்ஸ் என்பார் இயற்றிய இலக்கியத்தின் தன்மை, சொல்லின் கலைச்சுவை புலப்படக் கூறினால், உயர்வான உயர்தர மரபுவழி இலக்கியத் தன்மையை எய்தியுள்ளது; இந்த உயர்தர மரபுவழி இலக்கியத் தன்மை முற்றிலும் தன்னிறைவு எய்தியிருப்பதால் எந்தக்கோட்பாட்டுக் கிளையையும் விதியையும் சாராது தன்னுண்மையுடன் திகழ்கின்றது". பர்ன்ஸைப் போலவே வேமனரும் உழவர் இனத்தைச் சார்ந்திருப்பதாலும் அவரைப்போலவே சிறப்புத்திறமையுடைய வராதலாலும் அவரும் தனக்கே உரிய, தன்னுடைய உயர்வான உயர்தர மரபுவழி இலக்கியத் தன்மை யைப் படைத்துள்ளார்; அதுவும் "முற்றிலும் தன்னிறைவு" எய்தியுள்ளது.

வேமனர் தன்னுடைய கவிதையை எழுதினாரல்லர்; அதனை வாய்மொழியாகவே கூறினார். வோர்ட்ஸ் வொர்த் போலன்றி இவரிடம் கவிதை என்பது "அமைதியான நிலையில் திரும்பவும் நினைவூட்டும் மனவெழுச்சிகள்" அன்று; அது மனவெழுச்சிகள் வெண்சூட்டு நிலையிலுள்ளபோது தோன்றியதாகும். அவர்கொண்ட அதிக ஈடுபாட்டினால் அவர்தம் மனஎழுச்சிகள் அமைதிகொள்ளவில்லை. அவரிடம் எண்ணம் உருவானவுடன், அவர் மேற்கொள்ளும் பங்கு கவிஞரின் பங்கு அல்ல; மறைமெய்யைக் கொண்டவரின் பங்கை ஏற்கின்றார்;வருவதுரைக்கும் தீர்க்கதரிசியாகின்றார்.ஆகவே, அவர் எந்தக் கவிதைக் கொள்கையிலும் தம் கவனத்தைச் செலுத்துவதில்லை; பரதர், தண்டியார், அபிநவகுப்தர், ஹேமசந்திரர், போஜர் போன்ற அணி, இலக்கணத்தில் தனித்திறமை வாய்ந்தவர்களின் பெயர்களைக்கூடக் கேள்வியுற்றிருக்கமாட்டார். எனினும், அவர் மிகச்சிறந்த கவிதையையே "பேசினார்"; காரணம். பிறப்பிலேயே அவர் கவிஞராதலால் தன்னுடைய இதயத்தில் உண்மையாகவும் ஆழமாகவும் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளைக் கவிதைச் சொற்களாகத் தராமல் இருக்கமுடியாது. இதன் காரணமாக, அவருடைய கவிதை சிலசமயம் மிகப்பெரிய வெள்ளமாகவும் சிலசமயம் வெடித்துக் கிளம்பும் எரிமலையாகவும், சிலசமயம் கடல்

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/62&oldid=1250783" இலிருந்து மீள்விக்கப்பட்டது