பக்கம்:வேமனர்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அங்ஙனமே, வேமனரும் சொன்னார். அவர் மனித நோய்களைக் கண்டறிந்ததுடன் அவற்றிற்கு மருந்துகளையும் குறிப்பாகத் தெரிவித்தார். மனிதனுக்குத் தொண்டு புரிவதில் அவர் எப்பொழுதும் முன்நோக்கியே சென்று கொண்டிருந்தார். ஊர்ஊராகவும், சிற்றூர் சிற்றூராகவும், வீடுவீடாகவும் சென்றார். எல்லா இடங்களிலும் மனிதனிடமே பேசினார்; அப்பேச்சினைக் கவிதையாகவே பேசினார். பதிவு செய்யும் நோக்கத்துடன் பேசவில்லையாதலின், அவர் கவிதைகளைப் பதிவு செய்வதில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. அவர்மீது கொண்டுள்ள அன்பு காரணமாகவும் மதிப்புணர்ச்சி காரணமாகவும் அவர் சீடர்களில் சிலர் அக்கவிதைகளைக் குறித்து வைத்தனர். கற்றவர்கள் இல்லையாதலின் அவர்கள் பனையோலைகளில் எழுதி வைத்ததெல்லாம் சிலசமயங்களில் பிழைகள் மலிந்தவையாகவே அமைந்தன. மூலப்படிகளிலிருந்து மேல்படிகள் எடுத்தபொழுது மேலும் அதிக பிழைகள் நுழையலாயின. படியெடுக்கும் சிலர் ஒரு சொல் அல்லது வரி தெளிவில்லாதிருந்தால் அவர்களே வேறொரு சொல் அல்லது வரியைச் செருகி நிலைமையை மேலும் சீர்கேடாக்கினர். இதற்கெல்லாம் மேலாக வேமனரைப் பாராட்டுபவர்களும் குறைவுபடுத்துபவர்களுமாகச் சேர்ந்து தங்களுடைய பாடல்களையே போலியாகச் செருகிவிட்டனர்.

பிரௌன் காலத்திலிருந்து மூன்றாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் புதிதாகக் கண்டறியப்பெற்ற கையெழுத்துப்படிகளினின்றும் சிலரிடம் வாய்மொழிப் புழக்கமாக இருந்தவற்றிலிருந்தும் சேகரம் செய்யப்பெற்றன. அவற்றுள் எத்தனைப் பாடல்கள் உண்மையாகவே அவருடையவை என்பது பற்றி இன்னும் தீவிரமான ஐயத்திற்கிடமாக உள்ளது. பிரௌன் திரட்டியவற்றிலும் கூட ஒரு கணிசமான தொகை ஐயமற்ற இடைச்செருகலான பாடல்களேயாகும். என்றபோதிலும் வேமனரின் பாடல்களடங்கிய திறனாய்ந்த திட்டமான பதிப்பொன்றைக் கொண்டுவர இதுகாறும் யாதொரு முயற்சியும் மேற்கொள்ளப்பெறவில்லை. அவருடைய வெளியீட்டாளர்கள் செய்ததெல்லாம் பிரௌன் பதிப்பிலிருந்த மூலப்பகுதியை நேர்மையின்றி மாறுதல் செய்ததேயாகும்.

நிகழ்ச்சிகளின் வருந்தத்தக்க நிலையைச் சரிப்படுத்துவதில் ஏதாவது செய்வதற்கு இது தக்க காலமாகும். உண்மையானவை போல் தோன்றும் கந்தம் என்ற யாப்பில் அமைந்த சில பாடல்கள் நீங்கலாக 'ஆட்டவெலதி' என்ற யாப்பிலமையாத எல்லாப் பாடல்களும் நீக்கப்பெற்றும், ஒரே கருத்து திரும்பத்திரும்ப வரும் பாடல்களுள் சிறந்தவற்றை மட்டிலும் விடாமல் வைத்திருந்தும், வேமனரின் அடிப்படையான திட நம்பிக்கைகட்கு எதிரான

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/70&oldid=1250801" இலிருந்து மீள்விக்கப்பட்டது