பக்கம்:வேமனர்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

றையும் விட்டொழிக்கவேண்டும் என்றும் கூறுவார். ஏனையோரை நோக்கி இவ்வாறு கூறுவார்: "ஒவ்வொருவரும் யோகியாக வேண்டும் என்பதில்லை; அப்படி ஆகவும் முடியாது. ஆனால் நல்லவராகவும் சிறந்த குடிமகளாகவும் நிச்சயம் உன்னால் ஆக முடியும். இளமையாயிருக்கும்பொழுது பணிவுடைய மகனாகவும் ஆர்வமுடைய மாணாக்கராகவும் இருப்பாயாக. நேர்மையான வாழ்க்கைத் தொழிலுக்குப் பயிற்சி பெறுவாயாக. நன்கு வளர்ச்சிபெற்ற பிறகு வறிய குடும்பத்திலுள்ளவளாக இருப்பினும் அழகிய பணிவிணக்கமுடைய கன்னிப் பெண்ணொருத்தியை மணந்துகொள்வாயாக. அன்புடையவளாகவும் புரிந்துகொள்ளும் பண்புடையவளாகவும் உள்ள துணைவியைக் காண்பதென்பது மிகவும் கடினம் என்பதற்கு ஐயம் இல்லை; அங்ஙணம் ஒருத்தியைக் காண்பதில் நற்பேறுடையவளாக இருப்பின் உன்னுடைய மகிழ்ச்சி உறுதிப்படுத்தப்பெறுகின்றது. உன் உலகிற்கு-வீட்டிற்கு-நீ தான் தலைவன் என்பதை அவள் உணரச்செய்வாள். மேலும், நன்மக்கட்பேறும் உனக்கு ஏற்பட்டுவிடின், உம்பருலகப் பேரின்பத்தையும் நுகர்ந்து மகிழ்வாய். குடும்பத்தை வறுமையின்றி அமைப்பதற்காக நாணயமாகவும் ஓய்வாகவும், உழைப்பாயாக. முயற்சியை மேற்கொள்ளாமல் வாழ்க்கையில் எந்த நல்லவற்றையும் அடையமுடியாது. "நீர் பாய்ச்சாமல் மல்லிகை மலருமா?" என்றும் அன்புடையவனாகவும் இரக்கப்பண்புடையவனாகவும் இருப்பாயாக வாயிற்படி ஏறிவரும் வறியவர்களையும் தேவை கேட்டு வருபவர்களையும் விரட்டியடிக்காதிருப்பாயாக. நற்பயனுக்கு உதவாமல் செல்வத்தைத் திரட்டுபவர் புலத்தின் புள்ளோட்டி உருவத்தைப் போன்றவர்; அவர் செல்வச்செழிப்பின் நடுவே வாழ்கின்றார், ஆனால் அச்செல்வம் அவருடையதன்று. பெற்றோருக்கு நன்மதிப்பைத் தருக. எவ்வளவு செல்வத்தையும் நற்பெயரையும் அடைந்தாலும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் உன் தந்தை சிறுமையை உணருமாறு செய்தல் கூடாது. பேருண்மையை நாடுவோர் பேச்சிலும் தோற்றத்திலும் விநோதமாகக் காணப்பெறலாம்; அதனால் அவர்களைப் பரிகசிக்கவேண்டாம். செருக்கும் தற்புகழ்ச்சியும் கொள்ளற்க. இறுமாப்புடைய அறிவிலி மிகமிகக் கேடான அறிவிலி ஆவான். மனப்பான்மையில் தாராளமாகவும் பேச்சில் இணக்க வணக்கமாகவும், செயல்களில் பெருந்தன்மையாகவும் இருந்து கொண்டு குடும்பத் தலைவன் என்ற முறையில் தன்நிறைவினைக் காண்பாயாக. "நல்ல குடும்பத் தலைவன் உண்மையில் குடும்ப வாழ்வின் யோகியாவான்."

சுய அநுபவத்தால் பாலுந்தலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை நன்கு அறிந்த வேமனர் கூறுகின்றார்: பெண்களின் கவர்ச்சியாற்றலுக்கும் பசப்புப் பேச்சுக்கும் மனிதன் அடிமை

71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/78&oldid=1282628" இலிருந்து மீள்விக்கப்பட்டது