பக்கம்:வேமனர்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாகின்றான் என்பது உண்மையே. கண்கவர் எழிலுடை வனிதையுடன் பழகும் பொழுது யோகியும் என்றும் தன் மனததைத தூய்மையாகவும் குழப்பமின்றியும் வைத்திருக்க முடியாது என்ற போதிலும், இல்வாழ்வான் என்ற முறையில் நீ உன் துணைவியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க வேண்டும், பிறன் மனைவி மீது நாட்டம் வைப்பது, அவள்பால் காமநோக்குகளைச் செலுத்துவது பெரும்பாவமாகும். இன்பத்தை நல்கும் ஆற்றல் உன்பால் இருக்குமாயின், பரத்தையிடமிருந்து விலகியிருப்பாயாக. புற நோக்கில் எவ்வளவு பகட்டாகக் காணப்படினும் அவர்கள் அழுக்குடைய பெண் நாய்களுக்கு ஒப்பானவர்கள். மனம் மாறும் இயல்பும், பேராசையும், கல்நெஞ்சமும் கொண்ட அவர்கள் உன்னை ஏழ்மையில் கொண்டு செலுத்துவர். அதன்பிறகு சாறு பிழிந்த எலுமிச்சை பழத்தோல் போல் அவர்கள் உங்களைத் தூக்கி எறிந்து விடுவர். நீ ஒரு பரத்தையின் நட்பை வைத்துக் கொள்ள விரும்பினால்-இங்குதான் வேமனரின் உண்மை சொரூபம் மீண்டும் வெளிப்படுகிறது-நல்ல உருவமும், வசீகரமான தோரணையும், இசையிலும் நாட்டியத்திலும் நல்ல தேர்ச்சியும் பெற்ற ஒருத்தியைத் தேர்ந்தெடுத்துக் கொள்க. அவளுடைய நட்பை நாடுவதற்கு முன்னர், அவளுடன் வாழும் அவள் அன்னை இல்லையென்பதை உறுதி செய்து கொள்க. (எங்ஙணம் யோகி ஒருவர் இத்தகைய மானக்கேடான அறிவுரை நல்கக்கூடும் என்பதனால் அதிர்ச்சியடையவர்கள் அறிய வேண்டியது இது; இந்து சமூகத்தில் பத்தொன்பாதாவது நூற்றாண்டின் இறுதி வரையிலும் பரத்தையை வைத்திருப்பது மதிப்பு நிலையின் அறிகுறியாகக் கொள்ளப் பெற்றிருந்தது.)

எஞ்சிய வேமனரின் நீதி போதனையைப் பற்றி இங்ஙனம் சுருக்கமாக உரைக்கலாம்: எல்லாச் சந்தர்ப்பங்களிலும், உன் மனச்சான்றுக்கு ஏற்ப உண்மையாகவும் உறுதியாகவும் இரு. சிங்கம் ஒன்று வன்மையற்றும் நோயுற்றும் இருந்தால், ஒருநாய் கூட அதனை அச்சமின்றித் தாக்கும். இதனால் நீ எல்லோரிடமும் உன் முழு வலிமையையும் காட்ட வேண்டுமென்பது கருத்தன்று. வலிவுள்ள மனிதன் அமைதியாகவே இருப்பான்; அவன் அடக்கமாகவும் இருப்பான். எப்பொழுதும் வல்லந்தத்தைத் தவிர்ப்பாயாக கொல்லாமை உன்னுடைய சமயக் கொள்கையாக இருக்கட்டும். சிலர் மகாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்று மடமையினால் போற்றி உரைக்கின்றனர். அவர்கள் உடன்பிறப்பாளர்கள் கொல்லப் பெறும் போரையும் இரத்த வெள்ளம் பாயும் கொலையையும் விரும்புகின்றனர் என்று கொள்ளலாமா? உன் பகைவர்களில் மிகக் கொடுமையானவர்கள் கூட உன் கைகளில் சிக்கினால்,

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/79&oldid=1282629" இலிருந்து மீள்விக்கப்பட்டது