பக்கம்:வேமனர்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நடந்துகொள்ளும் முறையும் அமைந்துள்ளது." செல்வச் செழிப்புள்ள பொழுதுஅவள் கணவனைக் கவனிக்கின்றாள்; வறுமைக்காலத்தில் கணவன் அணுகும்பொழுது எழுந்திருக்கவும் செய்யாள்; அவன் உயிரோடிருந்தபோதிலுங்கூட இறத்துபட்டவனாகவே மதிக்கின்றாள். இங்கனமெல்லாம் கூறும் வேமனர், அன்னையை உயர்வாகக் கருதவேண்டும் என்றும், உண்மையில் அவள் தெய்வத் தன்மையின் திருவுரு என்றும் கூறுவதுதான் விந்தையாகவுள்ளது. பெண்ணை-சிறப்பாகத் துணைவியைப்-பழித்துக்கூறுங்கால் மனைவியாக இராமல் அவள் அன்னையாக ஆக முடியாது என்பதைத் தெளிவாகவே மறந்துவிடுகின்றார். எவ்வகையிலும் பெண்களைப்பொறுத்த வரையில், அவர் ஒரு பழைமைப்பற்றாளர், பிற்போக்காளர் என்றே சொல்லவேண்டும். ஆனால் வில்லியம் எச். கேம்பெல் வேமனருக்காக ஒரு சாக்குப்போக்கினைக் காண முயல்கின்றார். இந்தியாவில் எந்த ஒரு சீர்திருத்தத்திற்கும் பெண்கள் உறுதியான எதிர்ப்பாளர்களாக உள்ளனர்: மரபு வழியாக வரும் கருத்துகளிலும் வழக்கங்களிலும் அவர்களது உடன்பிறந்த பழைமைப் பற்றிலும் கண்மூடி வாளா ஏற்கும் பண்பாலும் தனது செல்வாக்கு வலுவின்மையை எய்தியதையும் தன்னுடைய முயற்சிகள் யாவும் திணறடிக்கப் பெற்றமையும் வேமனர் அடிக்கடி கண்டிருந்திருக்கலாம் என்பது அம் மேதறிஞரின் கூற்றாகும். இது பெரும்பாலும் உண்மை என்பது ஒப்புக்கொள்ளப்பெறத்தான்வேண்டும். ஆனால் இந்தியாவில் பெண்களின் பிற்போக்குத் தன்மைக்கு ஆண்கள் நேரடியாகப் பொறுப்பாளர்களாகவில்லையா? பன்னெடுங்காலமாக அவர்கள் பெண்களுக்குச் சுயேச்சை, கல்வி, அறிவொளி இவற்றைக் கொடுக்க மறுக்கவில்லையா? எந்த ஒரு நாட்டிலாவது பாதி சுயேச்சையாகவும், பாதி அடிமையாகவும், பாதிப்பேர் கற்றறிந்தவர்களாகவும், பாதிப்பேர் கல்வியில்லாதவர்களாகவும், பாதிப் பேர் அறிவுடையவர்களாகவும் பாதிப்பேர் அறியாமையுடையவர்களாகவும் இருப்பதைக் காணமுடியுமா? அத்தகைய ஒரு நாட்டில் இரண்டாம்பாதி உணர்ச்சியற்ற சுமையாகவும் ஒரு சக்கரத்தடை போலும் இருந்தால், அதற்குரித்தான பழியை முதற்பாதியின் தலையில் முற்றிலும் சுமத்தப்பெறல் வேண்டும்.

வேமனர் வேதங்களின் தனிச் செல்வாக்கை ஒப்புக்கொள்ளாவிடினும், அவருடைய சமயமெய்விளக்கத்தில் அவர் ஒரு வேதாந்தியே. "ஆடலணங்குகள்போல் வேதங்கள் உங்களை மயக்குகின்றன; வழி தவறி நடத்திச் செல்கின்றன" என்று கூறுகின்றார் அவர். பொருளுணராமல் வேதங்களே ஓதுபவர்களுக்கு அவர் குறைந்த நன்மதிப்பையே தருகின்றார். அவர்களை அவர் "குரைக்கும் நாய்கள்" என்று குறிப்பிடுகின்றார். அவர்கள் அங்ஙணம்

74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/81&oldid=1252127" இலிருந்து மீள்விக்கப்பட்டது