பக்கம்:வேமனர்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாக்கிக் கொண்டார். தன்னுடைய ஆழ்ந்த அறிவை நகைச்சுவையால் எளிமையாக்கினார். தான்கூறும் செய்தியை வஞ்சப்புகழ்ச்சியாலும் வசையுரையாலும் உயிர்ப்பூட்டினார். சமயத்தை அவர் எளியதாக்கினார். கவிதையின் நயத்தையும் மதிப்பையும் ஒழுக்க முறையில் பயன்படச்செய்தார்.

ஒரே ஒரு வேமனரே இருக்க முடியும். ஏனெனில் அவருடைய தனிச்சிறப்பு-மேதைத்தன்மை-புதுமை வாய்ந்தவராகவும் இணையற்றவராகவும் ஆக்கியது. ஆயினும், உலகிலுள்ள சில பெரியவர்களிடம் இருப்பதைப் போன்று சில பொதுத் தன்மைகளையும் கொண்டிருந்தார். எடுத்துக்காட்டாக தாழ்வான நீதிகள் மட்டிலும் இல்லாமல் உயர்முறை மன்றத்தலைவரான பேக்கனின் சொற்கருக்கத் திட்பமும், ஒளி வீச்சும், சிடுசிடுப்புத்தன்மை மட்டிலும் இல்லாது போப்பின் சொற்றிறமும் சொல்லொழுக்கமும், அசடு வழியும் மனித இனவெறுப்பு மட்டிலும் இல்லாமல்; ஸ்விப்டின் வசையுரை ஆற்றலும், அரசியல் குழப்பத்தை விளைவிக்கும் மனச்சார்பு மட்டிலும் இல்லாமல்; ஃபிரெஞ்சுநாட்டுச் சிந்தனையாளரான ரூஸோவின் உணர்ச்சிமிக்க மனவெழுச்சியும், சூழ்ச்சி மட்டிலும் இல்லாமல்; வால்டயரின் வஞ்சப்புகழ்ச்சியும் துணிச்சலும், ஷாவின் இயல்பான தெளிவுடன் அவருடைய சொற்கலை வித்தகமும் சட்டெனத் தோன்றும் எண்ணமும் பிற்காலத்தில் வாழ்ந்த டால்ஸ்டாயின் அனைத்தையும் உட்படுத்திய கொள்கையுடன் அந்தக் குலத்தலைவரின் நேர்மைத் துடிப்பும் வேமனரிடம் குடிகொண்டிருந்தன. வேமனரைப் பழித்துக் கூறுவோர் அவர் தமது எண்ணத்திற்கு ஒரே ஒருவரை நினைக்கச் செய்கின்றார் எனவும், அவர் வரலாற்றில் இல்லாதவரும் புனை கதையில் வருபவருமான டான் குக்ளாட் என்பவரேயாவர் என்றும் கூறலாம். இந்தக் கருத்தினைக் கொண்டிருப்பதற்காக அவர்களுடன் ஒருவரும் சச்சரவு கொள்ள வேண்டியதில்லை. சுருக்க ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின்படி டான்குக்ஸோட் என்ற சொல்லுக்கு "உணர்ச்சிக் கனிவுறும் கனஉருக்காண்பவர்", "மிக உயர்ந்த, ஆனால் பயனுக்குதவாத மிகச் சிறந்த குறிக்கோள்களை நாடுபவர்", "தன் மதிப்புடனும் பற்றுதியுடனும் ஒப்பிடுமிடத்து முற்றிலும் உலோகாயதக் கவர்ச்சிகளைக் கருதாத ஒரு மனிதர்" என்ற பொருள்கள் காணப்பெறுகின்றன. இந்த விளக்க உரைகளின் பகுதிகள் வேமனருக்குப் பொருந்தவே செய்கின்றன. இல்லாவிடில் அவர் விசித்திரமான தனித்தன்மை வாய்ந்த சிறந்தவராகத் திகழ்ந்திருக்க முடியாது. சில சமயங்களில் அவர் தன்னுடைய வாதப் பொருத்தத்தையும் கொள்கை மாருமையையும், குறிக்கோள் நெறியையும் புறக்கோடியை எட்டும் எல்லேவரையிலும் கொண்டு

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/86&oldid=1282633" இலிருந்து மீள்விக்கப்பட்டது