பக்கம்:வேமனர்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யுடன் பெற விரும்புகின்றா?" என்று வினவுகின்றார் வேமனர். சிறப்பாகச் சைவர்களை நோக்கி வேமனர் பேசுகின்றார்: "நீங்கள் கல்லாலாகிய காளையை வழிபடுகின்றீர்கள்; ஆனால் உயிருள்ள காளையைப் பட்டினி போடுகின்றீர்கள்; அல்லது அதனைத் தவறான முறையில் பயன்படுத்துகின்றீர்கள். வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெறும் தவறாண முறை இதற்கு மேலும் செல்லமுடியுமா? நீங்கள் வழிபடவேண்டியது உயிரற்ற கல்லை அல்ல; ஆனல் எல்லா உயிர்களிலும் தெளிவாகக் காணப்பெறும் உயிராற்றலையாகும்". சமயத்தின் புறப்பகுதிகளைப் பின்பற்றுதலை ஏளனம் செய்வதில் வேமனர் கபீருக்கு இணையாகின்றார். "நீரில் மூழ்குவதால் வீடு பேறு கிடைக்கக்கூடுமாயின், தவளைகள் நீரில் வாழ்கின்றனவே" என்கின்றார் கபீர். வேமனரும், நாம் முன்னர்க் குறிப்பிட்டது போல், இத்தகைய ஒரு கருத்தினைக்கூறுகின்றார். ஒருவருக்கொருவர் அயலராக இருந்தபோதிலும் வாழ்க்கையையும் வாழ்க்கையையொட்டிய பிரச்சினைகளையும் அணுகும்முறை இருவரையும் ஒரே உண்மைகளைப் போதிக்கச் செய்கின்றது.

உணர்ச்சி இயல்பிலும், சிந்தனையிலும், கூறும் முறையிலும் வேமனர் திருவள்ளுவரிடமோ கபீரிடமோ இருப்பதைவிடச் சர்வக்ஞரிடம் மிக நெருக்கமாகக் காணப்படுகின்றார், இங்ஙனம் இவர்களை நெருக்கமாகப் பிணைப்பது ஒருவேளை இவர்தம் பொதுவான பின்னணி வண்ணமாக இருக்கலாமோ என்று தோன்றுகின்றது. இளைஞர்களாக இருந்த காலத்தில் இருவரும் காமுகர்களாக ஊர் சுற்றித் திரிந்தவர்கள்; இருவரும் தொடக்கத்தில் பரத்தையர்களிடம் அதிக மோகங்கொண்டு திரிந்தவர்கள்; பின்னர் அவர்களிடம் வெறுப்படைந்தவர்கள். மேலும், இருவருமே திடீரென்று காமக்களியாட்ட வாழ்க்கையினின்றும் சமய வாழ்க்கைக்குத் திரும்பியவர்கள்; ஆனால் கொடுமையான சமூக அமைப்பிற்குப் பலியாட்களாக அமைந்த தேவதாசிகள் இருவருடைய எண்ணங்களிலும் தொடர்ந்து இருந்து கொண்டிருந்ததால் இவர்கள் அந்த ஏழை இழிஞர்களைப் பழித்துரைக்கும் சந்தர்ப்பத்தைத் தவற விடுவதில்லை. அந்த இருவருடைய குருட்டிடமும் பெண்ணைப் பற்றியே இருந்தது என்றும் சொல்லலாம். வேமனருக்கு முற்பட்டவர் சர்வக்ஞர் என்ற கருத்து வாதத்திற்குரியதாகும். ஆனால் இருவரைப்பற்றியும் ஆழ்ந்து ஆய்ந்த இரால்லபள்ளியார் சர்வக்ஞரின் செல்வாக்கு வேமனர் மீது இருந்தது என்று கூறுவதைவிடப் பின்னவரின் செல்வாக்கே முன்னவரின்மீது இருந்தது என்று கருதுவதற்கே அதிகக் காரணங்கள் இருப்பதாகக் கருதுகின்றார், எவ்வகையிலேனும் இருவரிடமும் பல ஒருமித்த பண்புகள் இருந்தபோதிலும், வேமனரும் சர்வக்ஞரும் ஒருவருக்கொரு

82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/89&oldid=1282636" இலிருந்து மீள்விக்கப்பட்டது