பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ஒருநாள் போதுமா?

அத்தனைக் கண்களும், ஒரே ஒரு திசையைப் பார்த்து மொய்க்கின்றன. அன்று யாரும் வரவில்லை. இதற்குள் ஏழெட்டு மேஸ்திரிகள் வந்திருக்க வேண்டும். யாரையும் காணவில்லை. இனி வந்தாலும் பாதி நாள் வேலைதான். பாதி நாளானாலும் போக வேண்டும். வயிற்றில் பாதி நிரம்பினாலாவது போதும். ஆனால், நிரப்புபவர்களைக் காணவில்லை. இவர்களைப்போல் கூடியிருக்கும் ராயபுரத்திற்கும், சூளைக்கும் சைதாப்பேட்டைக்கும் சொல்லி வைத்ததுபோல் போய் விட்டார்களா? நாளைக்காவது வருவார்களா?

கட்டாஞ்சுவர் போன்ற மேனியில் கிழிந்த பனியனும் நைந்த டவுசரும் போட்டிருந்த ஒட்டர்கள் சுண்ணாம்பாய் குழைந்து போய் நின்றார்கள். 'மண் வேலையில் கை தேர்ந்த இந்த சேலத்து மனிதர்கள். அருகருகே நின்ற தத்தம் மனைவிகளை ஆதங்கமாகப் பார்த்துக் கொண்டார்கள். கையோடு பிடித்து காலோடு அணைத்திருந்த கடப்பாரையை தொடைகளில் உருட்டிக் கொண்டார்கள். பாண்டுக் கூடையைக் கவிழ்த்து விளையாடப் போன ஐந்து வயது மகளை ஒரு ஒட்டப் பெண் தலையில் குட்டினாள். அந்தக் குழந்தை அழாமல் பரிதாபமாகப் பார்த்தது. ஒருவேளை காலையில் கஞ்சி குடித்திருந்தால் அழுதிருக்கும்.

உத்திராட்சக் கொட்டையைப்போல், இரண்டு மடங்கு பெரிய நூல் கட்டிய வட்டக் குண்டை வலது கையில் பிடித்தபடி மணியாஸ் கட்டையையும். லெவல் பார்க்கும் மூலமட்டத்தையும் பிளாட்டாரத்தில் போட்டு அவற்றை இடக்கையால் குழந்தையை தடவுவது போல் தடவி விட்டுக் கொண்டிருந்த கொத்தனார்களில் பலர் வயிற்றுக்கும் தொடைக்கும் இடையிலுள்ள உடல் பாகத்தை மணியாஸ் கட்டையாலும் 'எல் வடிவத்தில் அமைந்த மூலமட்டத்தாலும் அமுக்கிக் கொண்டார்கள். 'பைப் ரிஞ்சையும் ஆக்ஷாபிரேமையும் கையோடு வைத்திருந்த பிளம்பர்களின் கண்கள் வெள்ளிப்பழங்கள் போல் கருவிழி போனதாய் காட்சியளித்தன. கூர்க்கம்பிகளாய் முடிந்த வாளையும், திருகாணி போன்ற உழைப்பாயுதங்களையும் வைத்திருந்த ஆசாரிகள், தலைப்பாகைகளை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்கள்.

மாயமோ, மந்திரமோ, மண்ணாங்கட்டியோ, அன்று எந்த மேஸ்திரியும் வரவில்லை. இன்று கான்கிரீட் போடுவதற்குக் கட்டிடம் இல்லையா? கதவு போட கட்டிய வீடு இல்லையா? பெயிண்ட் அடிக்கக் கதவில்லையா? வாணம் வெட்ட, கிரவுண்ட் இல்லையா? கலவைப் போட சிமெண்ட் இல்லையா? என்ன இல்லை? நேற்று. இங்கே ஒரு கலாட்டா நடந்தது உண்மைதான். சோடா பாட்டில்கள், சுக்கு நூறாக உடைந்ததும் உண்மைதான் சில கூலிக்காரர்கள் நாங்கள் ஏமாளியல்ல சாமி.