பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 87

வேலைக்கு ஆள் கொண்டு போறவருக்கு ஐம்பது ரூபாய் தேறுமுன்னா, எங்களுக்கு ஒரு இருபது தேரப்படாதா என்று கேட்டதும் உண்மைதான். இந்த கேள்விக்கும், சோடா பாட்டில் வீச்சுக்கும் சம்பந்தமில்லை என்பதும், மனிதர்களை வாங்க வந்த மேஸ்திரி-மனிதர்களுக்கும் தெரியும், இனிமேல். இந்த ஏரியாவுல கால் வச்சால். என்பேரை மாத்திக் கூப்பிடுன்னு ஒரு மேஸ்திரி கூப்பாடு போட்டாலும், அவர், தன் வார்த்தைகளை, சொல்கிற வேகத்திலேயே மறக்கக்கூடிய மனிதர் என்பது, அங்கே இருப்பவர்களுக்கும் தெரியும்.

உழைப்பால் ஏற்படும் களைப்பைவிட, உழைப்பை விற்பதற்காய் நின்ற களைப்பு மேலோங்க, ஒரு சிலர் எழுந்தார்கள். எழுந்தவரில் ஒரு வாலிபப் பையனுக்கு, வயிற்றுக்குள் இருந்த வாயு, இடுப்பில் திருகாணி போல் பிடி போட, எப்பாடி என்று முனங்கிக் கொண்டே பைசா நகரத்துக் கோபுரம் போல் வளைந்த அவன், மேலே நிமிர முடியாமலும் கீழே உட்கார முடியாமலும் நெளிய, அவனோடு சேர்ந்து எழுந்த கொத்தனார் கொண்டையா, இன்னாடா குழி குளிக்கப் போறவன் மாதிரி நெளியுறே? என்றார். மெளனத்தின் உருவகமான அந்தக் கூட்டத்தில் முதல் ஒலி யாக முழங்கிய அந்தக் கிழவரை அந்த வாலிபன் சங்கோஜத்துடன் பார்ததான். பிறகு இடுப்பை நிமிட்டி விட்டுக் கொண்டே கேட்டான்.

"நீ ஏன் பேசமாட்டே? ஒனக்கு வந்தா தெரியும்." “ஒன்னோட வலி மேஸ்திரி வந்தா பூடும். இது வாயு வலியில்லை. வாழ்வோட வலி. இன்னா முத்து. நான் சொல்றது சர்த்தானா?. இவன் மாதிரிதான் எனக்கும் வலிக்குது. ஒனக்கும் வலிக்குது."

'பெரியாள் முத்து அவரை வெறித்துப் பார்த்துவிட்டு பிறகு எழுந்து பதிலளித்தார்.

"நீ சொல்றதும் சரிதான். ஆனா. ஒனக்குப் பொருத்தமில்ல." "இன்னாடா சொல்றே?" "நாங்க. பெரியாள் வேலைக்குப் போறவங்க. கம்மனாட்டிங்க. மிஞ்சி மிஞ்சிக் கொடுத்தால் பன்னிரண்டு ரூபாய் தர்வான். அதுலயும் சில சமயம் ரெண்டு ரூபாய் முள்ளங்கி பத்த மாதிரி. மேஸ்திரி மவராசனுக்கு அழுகணும். ஒனக்கு இருபத்திரண்டு ரூபா. ஒனக்கும் வலிக்கின்னா இன்னா அர்த்தம்? எண்ணக் குடம் போட்டவனும் தண்ணிக்குடம் போட்டவனும் ஒரே சீரா பொலம்புனா. இன்னா அர்த்தம்?"