பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஒருநாள் போதுமா?

உதிரிப்பூக்கள் போல், தலைமுடிக் கற்றையை ஒழுங்கு படுத்தாமல், மேலும் கீழுமாக அப்பி வைத்தபடி, கழுத்தின் மேல் பகுதியைச் சொறிந்து கொண்டிருந்த தாயம்மா, சல்லடைபோல் படர்ந்த தேம்பல் உடம்பை குலுக்கிக் கொண்டே அதட்டினாள்.

"ஏய். இன்னாசி எண்ணெய் குடந்தான் உசத்தின்னு பேசாதடா. நம்மள மாதிரி ஏழைங்களுக்கு தண்ணிக் குடந்தான் ஒசத்தி. ஒரு கரண்டி எண்ணெயில. ஒடம்ப தேச்சுக்க முடியுது. ஒரு செம்பு தண்ணி கிடைக்குதாடா? கார்ப்பரேஷன் கம்மனாட்டிங்க, ஆட்டு வரிக்கி மட்டும் வந்துடுறாங்க."

"ஒன்காவது குட்ச கீது. எனிக்கி, அதுகூட இல்ல." "ஒன்பாடு தேவலம்மே. இந்தப் பிளாட்பாரத்துலயே படுத்துட்டு. இங்கேயே வேலக்கி காத்திருக்கலாம். நானு எம்மாந் தொலவு நடக்கணும்"

"எக்கா. நீ அறிவோட பேசறியா? பணக்காரங்க, குடிசை ஜனங்க தேவல. சாப்பாடு தவிற வேறு பிரச்சினை இல்ல. நம்மள மாதிரி பிள்ளைங்களுக்கு நகை நட்டு பண்ற கவல இல்ல. தெவசம் கிவசம் என்கிற பிரச்சினை இல்லைன்னு சொல்றது மாதுரியே நீயும் பேகறியே. பேசாம இங்க வந்து குந்து. நானு. ஒன் குடிசைக்கு பூடுறேன்."

"இன்னாம்மே நீ... ஒரு பேச்சுக்குக் கூட. உன்னண்ட பேசப்படாதா?." இதற்குள், சேலத்து ஒட்டர் தெருவில் குதிரைக் கொண்டையுடன், பிரா மார்பகத்துடன் தொப்புளுக்குக் கீழே புடவைபட அலுக்கிக் குலுக்கி நடந்த ஒரு பெண்ணையே வாயைப் பிளந்தபடி பார்த்தார். அவர் வாயையே பார்த்து, தன் வாயை மென்று கொண்ட கொத்தனார், அவரை அதட்டுவது மாதிரியான பொய்க் கோபத்துடன் பேசினார்:

"டேய். மாரி. அந்த ஜோர்ல மயங்கிடாதடா. இதுங்கல்லாம் ரேட்டுங்களாக் கூட இருக்கும்."

"என்ன சாமி. நீ ஒன் வயசுக்கு தோதுவா பேசமாட்டே?” "நான் ஒன் வயசுக்கு தோதுவா பேசுறேண்டா..." "நீ வேற. அவனவன் குழி வேலைக்கிக் கூப்பிட ஆளில்லையேன்னு தவிக்கான். நீ ஒன்னோட ஆசய. என்னோட ஆசயா வச்சுப் பேசுறே."

"விட்டேன்னா ஒரு குத்து. பின்ன ஏண்டா. கம்மனாட்டி அதைப் பார்க்கிறே?"