பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 89.

"நீதான் விடமாட்டியே சாமீ. என்னோட டவுசரை தொப்புளுக்குக் கீழே இழுத்துப் போடுறேன். ஏன்னா. டவுசர் பட்டை கிழிஞ்சிட்டு. கீழே இழுத்தால்தான் மானத்தை மறைக்கலாம். ஆனால் அந்தம்மா.. மானத்தை இழுத்துக் கீழே போடுறது மாதிரி சேல இழுத்துப் போடுறாங்களே. ஒரே காரியத்த ரெண்டு பேரு செய்யறப்போ. எவ்வளவு வித்யாசம் இருக்குன்னு நெனச்சேன். நீ என்னடான்னா..."

ஒட்டரின் மனைவி கணவரை அதட்டினாள்.

"அறிவுலாம பேசாதய்யா. ஜாம்பஜாரு டைய்லரன்டா போயாவது பாரு. இல்லன்னா. மானம் பூடும். இப்ப காட்டியே. ஒன் டவுசர்ல. ஒட்டுப்போட்டு தச்சிருக்கு. பேசுது. பெரிய பேச்சா."

மனைவி சொன்னது சரியெனப்பட்டதுபோல், முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க அந்த ஒட்டர், மண்வெட்டியை தோளில் போட்டுக் கொண்டு நடக்கப் போனார். அவரோடு சேர்ந்து இன்னும் பலர் நடக்கத் துவங்கினார்கள். கொத்தனாரான கொண்டையா, வட்டக் குண்டை இடுப்பில் செருகிக் கொண்டு பூணுல் மாதிரி தெரிந்த கயிற்றை மடியில் செருகிக் கொண்டு நடக்கப் போனார். ஒட்டர் அவரைப் பார்த்துச் செல்லமாகக் கண்டித்தார்.

"நீ ஏன் சாமி பொறப்படுறே? தொழில்காரன் நீ மூணு மணிக்குக் கூட. மேஸ்திரி வந்து. ராசா மாதிரி கூட்டிப் போவான். நீ ஏன் வார?" "பேசாதடா... இன்னிக்கி. பெரியாளாய் கூட. வேலப் பார்த்தாகணும்."

இடுப்புப் பிடியில் இருந்து மீண்ட வாயு வாலிபன், பரிகசித்த குரலோடு, முதுகை வளைக்க முடியாமல் வளைத்து, சிரிக்க முடியாமல் சிரித்துப் பேசினான்:

"பொல்லாத கெயவன்யா. சம்பாதிக்கிறதெல்லாம் இன்னாயா பண்றே? இன்னிக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தா குடியா முழுகிடும்."

"ஆமாண்டா. நான் தெனமும் வேல கெடச்சு. தெனமும் இருபது முப்பது சம்பாதிச்சு, குடிசையில் கொட்டி வச்சுருக்கேன். இப்போ குட்ச தாங்க முடியல. நீ வாணுமுன்னா வந்து வாரீக்கின்னு போறியா?"

"ஒன் காசு, பிசாத்து காசு, எனக்கு எதுக்குய்யா? தள்ளாத வயசுல ஏன் பணம் பணமுன்னு அடிச்சுக்கிறேன்னு சொல்லங் காட்டி.."

டேய் சோமாறி. வாணுமுன்னா என் வீட்ட வந்து பாருடா. ஒன்னோட குடிசையிலயாவது ஒன் நயினா நார்க்கட்டுல வாங்கி போட்டுகினான். என்னோட வீட்ல ஒக்கார ஒரு பலகக்கூட கெடயாது.