பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ஒருநாள் போதுமா?

இரண்டு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவச்சேன். ஒரு மொவளயாவது படிக்க வைக்கலாமுன்னு ஸ்கூல்லே சேத்தேன். போன மாசம் முப்பது நாளில் இருபது நாளா மொடங்கிக் கிடந்தேன். வாத ஜூரம், ஒனக்கு நானு சம்பாதிக்கறதுதான் கண்ணுல படுது. கஷ்டப் படுகிறது தெரியமாட்டேங்கிறது பாரு..."

'அய்ய இன்னா வாத்யாரே டமாஷ்க்கு சொன்னால் கோவிச்சுக்கிறியே. உன் கிட்ட டமாஷ் பேசாம நானு யார்கிட்ட டமாஷ் பேசுவேன்."

"வயசுப் பொண்ணுக்கிட்ட பேசு!" "சாரத்துல ஏறி, பாண்டுல கல்லு மண்ணை கொண்டு போற பேஜார்ல, வயசுப்பொண்ணு நெனப்பும் வரல. நானு வயசுப் பையன் என்கிறதும் வரல. ராத்திரிக்கு கெனாவுல கூட கல்லுமண்ணு சுமக்கறாப் போலவும். சாரத்துல இருந்து கீழே விழுந்து காலு ஒடிவது மாதிரியும் தோணுது. சீ. இன்னாய்யா பொய்ப்பு. கஷ்டப்படுறவனுக்கு கனாவுல கூட கஷ்டந்தானா வரணும்?"

தாயம்மா குறுக்கிட்டாள். "கொத்தனாரே, எனக்கு ஒரு ஐடியா தோணுது. இந்த அறியாத வயகப் பொண்ணுங்கள. கோட்டாப் பண்ற காலேஜ் பசங்கள. சாரத்துல ஏத்தி, பாண்டுவ தலையில கொடுத்துட்டாப் போதும். பொண்ணுங்க தாராளமாய் நடமாடலாமுன்னு நெனக்கிறேன்."

"பசங்களக் கோட்டா பண்ற பொண்ணுங்கள என்ன பண்றது?" "எந்தப் பொண்ணும் வலியப் போகமாட்டாள், நெனச்சுக்கோ." "நீ அன்னாடம் காய்ச்சிப் பொண்ணுங்கள மன்சில வச்சுப் பேசுற தாயம்மா. நம்மள மாதுரி கஷ்டப்படுறவனோட பொண்ணுங்க தலையில இருக்கிற பாராங்கல்ல தூக்கிச் சுமக்க, மார்ப தம்பிடிச்சு நிமிர்த்துறத, வாயப்பிளந்து பார்க்கிற கம்மனாட்டிப் பயலுவ கீராங்க... சினிமாக்காரங்களோட போட்டோக்களை எங்கெல்லாமோ வெச்சுக்கிட்டு அவங்க வீட்டுப்பக்கம் காத்துக்கிடக்கிற கஸ்மால முண்டங்களும் இருக்காங்கோ. தெரிஞ்சுக்கோ."

"எனக்கென்னமோ. உடம்புல உழைப்பு இல்லாட்டி மனசுல கோளாறு வருமுன்னு தோணுது. நீ. இன்னாம்மே பூரீதேவி மாதிரி குழையுற?"

தொலைவில் மேஸ்திரி யாரும் தென்படுகிறாரா என்று துழாவிய கண்களோடு பார்த்துவிட்டு சலித்தவள் போல் முகம் சிலுக்கப் பார்த்த